இன்றைய ராசிபலன் 18-03-2018

மேஷம்: தேவையில்லாத செலவுகள் ஏற்படும். செய்யும் காரியங்களில் தாமதம் ஏற்படும். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கைத்துணைவி சில நேரங்களில் பிடிவாதம் பிடித்தாலும் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு இருக்காது. பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு உண்டு.

ரிஷபம்: எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. வாழ்க்கைத் துணை வழி உறவுகளிடம் எதிர்பார்த்த காரியம் நல்லபடி முடியும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணம் வாங்கும் யோகம் ஏற்படும். வியாபாரம் நன்றாக இருக்கும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாகச் செல்லவும்.

மிதுனம்: இன்று செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்துடன் கோயில்களுக்குச் சென்று வருவீர்கள். சிலருக்கு தாய்வழியில் பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. மனதில் நிம்மதி அதிகரிக்கும். இதுவரை இருந்து வந்த உடல் உபாதைகள் நீங்கி ஆரோக்கியமாகக் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் மகிழ்ச்சி உண்டாகும்.

கடகம்: எதிர்பார்த்த பணவரவு இருக்காது. பிள்ளைகள் வழியில் தேவையில்லாத செலவுகள் ஏற்படும். சிலருக்கு ஆரோக்கியம் சிறிதளவு பாதிக்கப்படும் என்பதால், உடனுக்குடன் மருத்துவரைக் கலந்தாலோசிப்பது நல்லது. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கவும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தினருடன் கோயில்களுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும்.

சிம்மம்: இன்று சிறிதளவு உடல்நலக் குறைபாடு ஏற்படும். மனதில் தேவையில்லாத குழப்பங்கள் இருக்கும். எதிரிகளால் மறைமுகத் தொல்லைகள் ஏற்படும் என்பதால், எதிலும் கவனத்துடன் இருப்பது அவசியம். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் பணியாளர்களால் தேவையில்லாத சங்கடங்கள் ஏற்படும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் ஆதாயம் ஏற்படும்.

கன்னி: செய்யும் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தந்தை வழி உறவுகளால் பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படும். வாழ்க்கைத்துணையால் எதிர்பார்த்த உதவியும், அதனால் மகிழ்ச்சியும் கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்கு புதிதாக வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு இருக்கும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றும் வாய்ப்பு கிடைக்கும்.

துலாம்: உடல் ஆரோக்கியம் மேம்படும். உங்கள் முயற்சிகளுக்கு சகோதரர்கள் ஒத்துழைப்புத் தருவார்கள். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். மாலையில் உறவினர்கள் மற்றும் நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.

விருச்சிகம்: காரியங்களில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டாலும் அதனால் பாதிப்பு எதுவும் இருக்காது. வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படும் என்பதால், பயணங்களைத் தவிர்ப்பதுடன், வெளியில் சாப்பிடுவதையும் தவிர்க்கவும். மனதில் தேவையில்லாத குழப்பங்கள் இருக்கும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகவே இருக்கும். பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் ஆசிகளைப் பெறும் வாய்ப்பு ஏற்படும்.

தனுசு: காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உறவினர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்படும் என்பதால், தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. தேவையற்ற செலவுகள் இருக்கும். சிலருக்கு சிறிய அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விடவும் கூடுதலாக இருக்கும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் வீண் செலவுகள் ஏற்படும்.

மகரம்: எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். புதிய முயற்சியைத் தொடங்குவது அனுகூலமாக முடியும். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். சகோதரர்கள் உங்களுடைய யோசனையை ஏற்றுக்கொள்வார்கள். வியாபாரத்தில் இதுவரை இருந்த தடைகள் நீங்கி, விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க வகையில் செலவுகள் ஏற்படக்கூடும்.

கும்பம்: தந்தை வழியில் செலவுகள் ஏற்படும். எதிலும் நிதானத்துடன் செயல்படுவது மிகவும் அவசியம். பிற்பகலுக்கு மேல் சிலருக்கு மனதில் குழப்பம் ஏற்படக்கூடும். சிலருக்கு வேலை நிமித்தமாக வெளியூர்களுக்குச் செல்ல வேண்டி வரும். மாலையில் பள்ளிப்பருவ நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். வியாபாரம் மந்தமாகவே இருக்கும். எதிர்பார்த்த பணவரவில் தாமதம் ஏற்படும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும்.

மீனம்: உற்சாகமான நாள். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். மாலையில் உறவினர்கள், நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். மனதில் இனம்புரியாத மகிழ்ச்சி ஏற்படும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் விற்பனையும், லாபமும் அதிகரிக்கும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like