மாசி மாதம் கும்பம் மாதம். தமிழ் காலண்டரில் 11வது மாதம். இந்த மாதம் முழுவதும் சூரியன் கும்பம் ராசியில் பயணம் செய்வார்.
கூடவே புதன், சுக்கிரனும் சூரியனுடன் இணைந்து பயணம் செய்கின்றனர்.
மாசி மாதத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு நிறைய மாற்றங்களும் முன்னேற்றங்களும் கிடைக்கும்.
- தொட்டது துலங்கும் புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். இந்த மாசி மாதத்தில் 13-02-2021 முதல் 13-03-2021 வரை மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு என்னென்ன பலன் கிடைக்கும் பரிகாரம் என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.
- மாசி மாதம் மேஷம் ராசிக்காரர்களுக்கு ராசிக்கு 11ல் சூரியன், ராசியில் செவ்வாய், இரண்டாம் வீட்டில் நகர்ந்து ராகு உடன் நகர்கிறார். எட்டாம் வீட்டில் கேது, பத்தாம் வீட்டில் சனி, குரு, புதன், சுக்கிரன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.
- சூரியன் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் செய்யும் தொழில் லாபம் வரும். யோகமான மாதம் நினைத்த காரியங்கள் நிறைவேறும். மன அழுத்தம் நீங்கும். உங்களுக்கு பிரச்சினை ஏற்படுத்தியவர்கள் உங்களிடம் சரணடைவார்கள்.
- புதிய வண்டி வாகனம் வாங்கலாம். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
- சிலருக்கு புதிய வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளின் நம்பிக்கையும் ஆதரவும் கிடைக்கும். தொட்டது துலங்கும். வியாபாரத்தில் செய்யும் முதலீடுகளுக்கு பல மடங்கு லாபம் கிடைக்கும். தொலை தூரங்களில் இருந்து நல்ல செய்தி தேடி வரும். பதவி உயர்வு கிடைக்கும். வேலை விசயமாக வெளியூர் பயணம் செய்யலாம்.
- மாசி 9ஆம் தேதி செவ்வாய் இடப்பெயர்ச்சியாகி ராகு உடன் இணைகிறார். கோபத்தை கட்டுப்படுத்தவும். குடும்ப விசயங்களில் கவனம் தேவை. நெருப்பு விசயங்களில் கவனம் அவசியம்.
- சகோதரர்களுடன் தேவையில்லாத விசயங்களில் பேச வேண்டாம். லாப ஸ்தானத்தில் சுக்கிரன் சூரியன் இணைவதால் கூட்டுத்தொழில் நன்மையை கொடுக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் நிதானமும் கவனமும் தேவை.
- பெண்கள் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். சகோதரர்களுக்குள் சின்னச் சின்ன சண்டைகள் வரலாம் விட்டுக்கொடுத்து செல்லவும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு புரமோசன் வரும்.
- திருமண சுபகாரியம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அமாவாசை நாளில் குல தெய்வ வழிபாடு செய்யவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
- ரத சப்தமி நாளில் கோதுமையில் செய்த உணவுகளை தானமாக கொடுத்து சூரிய நமஸ்காரம் செய்யவும்.