கொடிய புற்றுநோயை கூட அழிக்கும் சக்திவாய்ந்த அஞ்சறைப்பெட்டி அன்னாசிப்பூ! யாரெல்லாம் சாப்பிட வேண்டும்?

அன்னாசிப்பூ நட்சத்திரம் போல் மினுக்கும் இது அஞ்சறைப்பெட்டியில் மட்டுமல்ல இது ஆரோக்கியமான மருத்துவபட்டியலிலும் இருக்க வேண்டிய பொருளும் கூட.

அன்னாசிப்பூ உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தருவதற்கும், குழந்தைகளின் வயிற்றுப் பிரச்சனைக்கும் எப்படி தீர்வாகிறது என்பது குறித்து ஏற்கனவே பார்த்திருக்கிறோம்.

அன்னாசிப்பூ உடலுக்கு தரும் பொதுவான நன்மைகள் குறித்து இப்போது பார்க்கலாம்.

  • அன்னாசிப்பூ சருமத்தில் இருக்கும் கறைகளையும் கரும்புள்ளிகளையும் வடுக்களையும் போக்க செய்கிறது. இதனால் சருமம் இளமையாக காட்சியளிக்கும். சரும அழகை மேம்படுத்த செய்வதால் உணவில் அடிக்கடி அன்னாசிப்பூ சேர்ப்பது நல்லது.
  • நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துவது அன்னாசிப்பூவின் முக்கியமான சுகாதாரமான நன்மைகளில் ஒன்று.
  • அன்னாசிப்பூ பாக்டீரியா எதிர்ப்பு விளைவுகள் ஆய்வுகளின் மூலம் அதிகமாக கண்டறியப்பட்டவை. இது வயிறு மற்றும் பிற உறுப்புகளின் பாக்டீரியா தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படுகிறது.
  • அன்னாசிப்பூ ஆன்டி பயாடிக் எதிர்ப்பு பாக்டீரியாவுக்கு எதிராக பயனளிக்க கூடியது. இது முன்பு சொன்னது போன்று மருந்து தயாரிப்பில் முக்கியமான பொருளாக உதவுகிறது.
  • இது சக்திவாய்ந்த பூஞ்சை எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளதால் பூஞ்சை தொற்று நோய்களுக்கும் இயற்கை தீர்வாக இருந்துவருகிறது.
  • அன்னாசிப்பூ ஆக்ஸிஜனேற்ற அளவுகள் மெக்னிசியம் உள்ளடக்கம் மயக்க பண்புகளை கொண்டுள்ளது. இது மன அழுத்தத்தை குறைத்து மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
  • தூக்கத்தை தூண்டும் நரம்பியல் கடத்திகளின் வெளியீட்டை மேம்படுத்துகிறது. தூக்கமின்மை பிரச்சனை இருப்பவர்கள் மருந்துகள் இல்லாமல் தூக்கத்தை பெறுவதற்கு அன்னாசிப்பூ உதவக்கூடும். இதை பொடியாக்கி மசாலா பாலாக குடிக்கலாம்.
  • இந்த மசாலாவில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடெண்ட்கள் குர்ட்செடின், தைமால், கூமரிக் அமிலம் வரை அனைத்தும் உடலில் இருக்கும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை பாதிக்கும். ஃப்ரீ ரேடிக்கல் அளவை குறைப்பதன் மூலமும், இது நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரிப்பதன் மூலமும் உடலில் பிற ஆபத்துக்களை குறைப்பதன் மூலமும் புற்று செல்கள் மற்றும் கட்டிகள் உருவாவதும் தடுக்கப்படுகிறது.