கொதித்தாறிய நீரை மீண்டும் மீண்டும் கொதிக்க வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? பேராபத்து… இனி இந்த பிழையை செய்யாதீர்கள்

தண்ணீரை நன்கு காய்ச்சி ஆற வைத்தோ அல்லது வெந்நீராகவோ குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது என்று நமக்குத் தெரியும்.

அப்படி நாம் குறிப்பிட்ட கொதிநிலையில் கொதிக்க வைக்கும் தண்ணீர் குறிப்பிட்ட நேர இடைவெளியில் ஆறிப்போய் சில்லென்று ஆகிவிடும்.

ஆனால் அதிலுள்ள கிருமிகள் நாம் முதல்முறை கொதிக்க வைக்கும்பொழுதே இறந்து விடும்.

ஆனால் சிலரோ அந்த கொதிக்க வைத்து ஆறிய நீரை குடிப்பதற்குத் தேவைப்படும் போது, காய்ச்சிதான் குடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படி ஒருமுறை காய்ச்சி ஆற வைத்த தண்ணீரை மீண்டும் காய்ச்சி குடிக்கலாமா என்பது பற்றி இங்கு காணலாம்.

காய்ச்சிய நீர்

ஒரு முறை குறிப்பிட்ட கொதிநிலையில் காய்ச்சிய தண்ணீரை ஆறவைத்துப் பயன்படுத்திவிட்டு மீண்டும் அதே தண்ணீரை மீண்டும் சூடுபடுத்துவது மிகவும் மோசமானது.

நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் உணவுப் பொருள்களை சூடுபடுத்தினால் தான் நமக்கு ஃபுட் பாய்சன் ஆகும் என்று.

ஆனால் காய்ச்சிய நீரை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தினாலும் அது சில சமயங்களில் விஷமாகவே மாறிவிடும்.

தண்ணீரில் உள்ளவை

பொதுவாக சாதாரண நீரில் பல்வேறு விதமான வாயுக்களும் மினரல்களும் இருக்கும். தண்ணீரில் உள்ள மினரல்களுக்கு நம்முடைய உடலுக்கு மிகவும் அவசியமானவை.

அதை நாம் அடுப்பில் வைத்து சூடேற்றும் பொழுது, அதில் உள்ள வாயுக்களும் மினரல்களும் வேதியியல் மாற்றத்துக்கு உட்படுத்தப்பட்டு, அதிலுள்ள மினரல்கள் முற்றிலும் அழிக்கப்பட்டு விடுகின்றன.

நீண்ட நேரம் காய்ச்சுதல்

தண்ணீரை பொதுவாக நன்றாகக் கொதிப்பது தான் நல்லது என்று நினைத்து நீண்ட நேரம் காய்ச்சிக் கொண்டே இருந்தாலும் அல்லது ஆறிய பின் மீண்டும் மீண்டும் காய்ச்சினாலோ உடலுக்கு விரும்பத்தகாத வேதிப்பொருள்கள் போய்ச் சேரும்.

குறிப்பாக, நைட்ரேட்டுகள், அர்செனிக் மற்றும் புளோரைடு போன்ற காரத்தன்மை கொண்ட வேதிப்பொருள்கள் அந் நீருக்குள் உருவாக ஆரம்பித்துவிடும்.

இப்படி செய்யலாமா?

பொதுவாக நாம் தண்ணீரை கொதிக்க வைத்து அதை குளிர்வித்து மீண்டும் காய்ச்சுவது தேவையில்லாமல் உங்களுடைய ஆரோக்கியத்துக்கு வைக்கும் வேட்டு. உதாரணமாக, டீ வைக்கும் பாத்திரத்தில் டீ வைப்பதற்காக கொஞ்சம் தண்ணீர் வைத்திருக்கீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதை அடுப்பில் வைத்து சுட வைத்துக் கொண்டிருக்கும் பொழுது, பாதியில் அதில் உள்ள தண்ணீர் குறைவாக இருக்கிறது என்று நினைத்து மீண்டும் சிறிது தண்ணீர் ஊற்றி காய வைக்கும் பழக்கம் பெரும்பாலும் எல்லா வீடுகளிலும் இருக்கிறது. அது உங்களுடைய உயிருக்கே உழை வைக்கும் முயற்சி என்பதை மறந்துவிடாதீர்கள்.

விளைவுகள்

ஒருமுறை காய்ச்சிய தண்ணீரை மீண்டும் மீண்டும் சூடுபடுத்திக் குடிப்பதனால் தண்ணீரில் சேகரிக்கப்படுகிற கால்சியம் உப்புகள் பித்தப்பையில் கற்களையும் சிறுநீரகக் கற்களையும் ஏற்படுத்துகின்றன.

மேலும் அதிலுள்ள நைட்ரேட்டுகள் நைட்ரோசைமன்களாக மாறி கார்சினோஜெனிக் என்னும் ஒருவகை விஷப்பொருளாக மாறிவிடுகின்றன.

மேலும் அதில் உள்ள நச்சுக்கள் புற்றுநோய், இதய நோய்கள், நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை உண்டாக்குகிறது.