இந்த கரடு முரடான சேனைக்கிழங்கை தொடர்ந்து சாப்பிட்டால் உடலில் கெட்ட கொழுப்பு குறையுமாம்!

கிழங்கு வகை உணவுகள் அனைத்துமே பொதுவாக மனிதர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து நிறைந்தவையாகவே இருக்கின்றன.

அதற்கு இந்த சேப்பங்கிழங்கும் விதிவிலக்கல்ல. இந்த சேப்பங்கிழங்கு மாவில் உயர்ந்த அளவு கார்போ சத்து மற்றும் நார்ச்சத்தும் உள்ளது. பச்சை சேப்பங்கிழங்கில் 10% கார்போ சத்து இருக்கும் போது, சேப்பங்கிழங்கு மாவில் 67% உள்ளது. இதேபோல், சேப்பங்கிழங்கில் நார்சத்து 12% ஆகவும், அதுவே சேப்பங்கிழங்கு மாவில் 31% ஆகவும் உள்ளது.

சேனைக் கிழங்கு உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைப்பதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அறியப்படுகிறது. இது ஒரு மெலிதான உணவாக பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இதில் உள்ள ஒமேகா-3-கொழுப்பு அமிலங்கள் உடலில் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க உதவுகின்றன, அதே நேரத்தில் குறைந்த அடர்த்தி கொண்ட கொழுப்புப்புரதங்கள் மற்றும் மிகக் குறைந்த அடர்த்தி கொண்ட கொழுப்புப்புரதங்களின் அளவைக் குறைக்கின்றன.

புற்றுநோய் தடுப்பு

சேனைக் கிழங்கில் நார்ச்சத்து நிறைந்திருப்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே, எனவே பெருங்குடல் புற்றுநோயைத் தடுப்பதில் இது மிகவும் நன்மை பயக்கும். கூடுதலாக, இந்த காய்கறியில் வைட்டமின் ஏ உள்ளடக்கமும் நிறைந்துள்ளது. இந்த வைட்டமின் நுரையீரல் மற்றும் பற்குழி புற்றுநோய்களைத் தடுப்பதில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.

நீரிழிவு நோய்

சேனைக் கிழங்கு குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் (low glycemic index) கொண்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். எனவே நீரிழிவு நோயாளிகள் இரத்த-சர்க்கரை அபாயம் இருந்தாலும் இந்த காய்கறியை எந்த பயமும் இல்லாமல் எடுத்துக்கொள்ளலாம்.

உடல் எடை

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் உணவு விடயங்களில் சில கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும் உடல் எடையை குறைப்பதில் சேப்பங்கிழங்கு மிகவும் உதவி புரிகின்றன சேப்பங்கிழங்கு கொழுப்பு இல்லாதது. குறைந்த கலோரிகள் கொண்டது. இதனால் எடை குறைப்பிற்கு சிறந்த இயற்கை உணவாக சேப்பங்கிழங்கு இருக்கிறது.

வயிற்றுக் கோளாறுகள்

கால்சியச்சத்து வயதானவர்களின் எலும்பு பலவீனமடைந்து விடாதபடி பாதுகாக்கிறது. பித்தக் கோளாறுகள், வயிற்றுக் கோளாறுகள் முதலியவற்றையும் இது குணமாக்குகிறது.