சுட்டெரிக்கும் வெயிலில் கரும்பு சாறு பருகுவதால் கிடைக்கு நன்மைகள் என்னென்ன தெரியுமா?

வெயில் காலத்தில் பெரும்பாலும், வெப்பத்தை தனிக்க பல வகையான உணவுகளை எடுத்துகொள்வோம். அந்த வகையில் கரும்புச்சாறை வாரத்தில் மூன்று நாட்கள் குடிப்பதால் என்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை பார்க்கலாம்.

கரும்புச்சாற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், இரும்புச் சத்து, மெக்னீசியம் கால்சியம் என்று நிறைய சத்துக்கள் உள்ளன.

எனவே இவை உடலில் நோய் தொற்றை எதிர்த்து போராடவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.

மேலும், இது ஒரு டையூரிடிக் என்பதால் இதை குடிப்பது நல்லது. இதனால் சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று தடுக்கலாம்.

சிறுநீரகம் சிறப்பாக செயல்படுத்துகிறது. சிறுநீரகக் கற்களுக்கு ஏற்படாமல் தடுக்கிறது.

கரும்புச்சாறு உடலில் கால்சியம், இரும்பு, பொட்டாசியம், மெக்னீசியம்,பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் மாங்கனீசு அளவை அதிகரிக்க செய்கிறது.

இது எலும்புகளை வலுப்படுத்த உதவும் ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. குறிப்பாக பெண்களுக்கு. தினமும் ஒரு டம்ளர் கரும்பு ஜூஸ் குடிப்பதன் மூலம் வயதானபிறகும் எலும்புகளை வலுவாக வைத்திருக்க செய்யும்.