இந்த ஆண்டில் ரிஷப ராசியினருக்கு லாபங்கள் சிறப்பாக இருக்கும். நீங்கள் நினைத்தது போல உங்களுக்கான தன வரவுகள், பொருள் வரவு இருக்கும். அதே சமயம் விரய செலவுகள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது.
- பிலவ தமிழ் வருடம் மகர லக்கினத்தில் பிறக்கிறது.
- மகரத்தில் சனி ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார்.
- குரு பகவான் கும்பத்தில் அதிசார பெயர்ச்சியில் இருக்கிறார்.
- மீனத்தில் புதன் பகவான் சஞ்சரிக்கிறார்.
- மேஷத்தில் சூரியன், சுக்கிரன், சந்திரன் சஞ்சரிக்கின்றனர்.
- ரிஷபத்தில் ராகுவும், மிதுனத்தில் செவ்வாயும் சஞ்சரிக்கின்றனர்.
- கேது விருச்சிகத்தில் இருக்கிறார்.
இந்த பிலவ வருடம் ரிஷப ராசிக்கு 9ம் இடமான மகர லக்கினம் அமைகிறது.
ரிஷப ராசிக்கு அதிகளவில் வெளியூர், வெளிநாடு, வெளிமாநிலம் பயணம் செய்ய வேண்டி வரும். அது அந்த ராசியைச் சேர்ந்த ஒவ்வொருவரின் வேலை, கல்வி, தொழில், வியாபாரம், சொந்த விஷயம் தொடர்பாக அமையும்.
மேலும், தன வரவுகள், பொருள் வரவு இருக்கும். அதே சமயம் விரய செலவுகள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது. நிதி நிலை சிறப்பாக இருக்கும்.
குரு தற்போது அதிசாரமாக ராசிக்கு 10ம் இடத்தில் இருப்பதால் தொழில், வியாபாரம் சிறக்கும். நினைத்த லாபம் கிடைக்கும்.
இதுவரை பிரச்னை கொடுத்து வந்த ராகு பகவான் உங்களுக்கு இனி நற்பலன்களைத் தரக்கூடியவராக இருப்பார்.
குடும்பத்தில் அமைதியும், நிம்மதியும் ஏற்பட குடும்ப உறுப்பினர்களிடம் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது அவசியம்.
திருமணம் உள்ளிட்ட சுப காரிய முயற்சிகள் வெற்றி தருவதாக இருக்கும்.
வெளிநாடு வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டால் நல்ல லாபம் தரக்கூடியதாக இருக்கும்.