கடக லக்னத்தின் அதிபதி சந்திர பகவான்., சந்திர பகவானுடன் சூரியன் சமம் என்ற நிலையில் இருந்து திசை நடத்தினால் நடக்கும் சுப மற்றும் அசுப பலன்களை பற்றி காண்போம்.
குடும்ப நபர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.பொருளாதாரம் மேன்மை அடையும். செல்வம் வீடு தேடி வரும்.
புதிய நபர்களின் ஆதரவுகள் கிடைக்கும். கண் தொடர்பான பிரச்சனைகள் குறையும். செல்வாக்கு அதிகரிக்கும்.
தனச்சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் உயர்வு உண்டாகும். தொழில் சார்ந்த முயற்சிகளில் ஆதரவான சூழல் உண்டாகும்.
கல்வியில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். மனதில் புதுவிதமான இலக்கை நிர்ணயம் செய்வீர்கள். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் மும்முரமாக ஈடுபடுவீர்கள்.
குழந்தைகளால் பெருமைகள் சேரும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும். பெண்கள், காரியத் தடைகள் நீங்கி எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். மாணவர்களுக்கு படிக்காமல் விட்ட பாடங்களை படிப்பதில் கவனம் செலுத்துவீர்கள்.
சொன்ன சொல்லைக் காப்பாற்ற பாடுபடுவீர்கள். பரிகாரம் : ஞாயிற்றுக்கிழமைதோறும், சூரிய ஓரையில் சிவபெருமானை வழிபட்டு வர மேன்மை உண்டாகும்.