சனி, குரு வக்ர பெயர்ச்சி பலன் 2021: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் யாருக்கு சாதகம் ? யாருக்கு பாதகம்?

சனி பகவான் இப்போது மகர ராசியில் வக்ர கதியில் சஞ்சரிக்கிறார் மே 23ஆம் சனி வக்ரம் ஆரம்பமானது. அக்டோபர் 11ஆம் தேதி சனியின் வக்ரகாலம் முடிகிறது.

குரு பகவான் இப்போது கும்ப ராசியில் பயணம் செய்கிறார். ஜூன் மாதத்தில் 20 ஆம் தேதி வக்ரமடைந்து மகர ராசிக்கு வருகிறார். அக்டோபர் 18ஆம் தேதி குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதம் வரை இந்த இரண்டு கிரகங்களும் வக்ர நிலையில் பயணம் செய்கின்றனர்.

சனி குரு வக்ர காலங்களில் மேஷம், ரிஷபம், மிதுனம், கடக ராசிக்காரர்களுக்கு என்ன மாற்றம் வரும் என்று பார்க்கலாம்.

மேஷம்

செவ்வாய் பகவானை ராசி நாதனாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களே, கால புருஷ தத்துவப்படி 9, 10ஆம் அதிபதிகள் வக்ரமடைவதால் உங்களுடைய வேலை தொழில் வெளிநாட்டு பயணத்திற்கான திட்டமிடல் வெற்றிகரமாக முடியும். புதிய தொழில் தொடங்கலாம்.

தொழில் ஸ்தானாதிபதி சனி பகவான் வக்ரமடைந்து சஞ்சரிப்பதால் புதிய தொழில் தொடங்குவதற்கான காலம் கை கூடி வருகிறது.

குரு உங்களுக்க பாக்ய ஸ்தான அதிபதி, விரைய ஸ்தான அதிபதியும் கூட. தற்போது லாப ஸ்தானத்தில் உள்ள குரு வக்ரமடைவதால் பண வரவு அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் வரும். உங்களுடைய புதிய முயற்சிகளுக்கு வெற்றிகள் கிடைக்கும். வேலையில் மாற்றங்கள் ஏற்படும்.

புரமோசன் கிடைக்கும். வரக்கூடிய மாற்றங்களை எதிர்கொள்ள தயாராக இருங்கள். வீடு, வாகனம் வாங்கும் யோகம் வரும். சனி, குரு வக்ர சஞ்சார காலம் நான்கு மாதம் நடைபெறும்.

120 நாட்களில் புதிய முன்னேற்றங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். சிலருக்கு புதிய நோய்களை காட்டிக்கொடுக்கும் கவனம். செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானை வணங்க பாதிப்புகள் நீங்கி நன்மைகள் நடைபெறும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு சனி பகவான் யோக காரகன் நன்மை செய்பவர் சனி வக்ரமடைவதால் பயப்பட வேண்டியதில்லை.

நீங்கள் நினைத்த காரியம் வெற்றிகரமாக நடைபெறும். வேலையில் புதிய முயற்சிகள் செய்யலாம். வெற்றிகரமாக முடிவடையும். உங்களின் உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். தொழில் செய்பவர்கள் பெரிய அளவில் முதலீடு செய்யலாம். தொழில் வியாபாரத்தில் பண வரவு அதிகரிக்கும் கூடவே செலவும் வரும்.

உழைப்பு அதிகரிக்கும். வேலைப்பளுவும் கூடும். திடீர் அதிர்ஷ்டமும் லாபமும் வரும். பொருளாதார நிதி நெருக்கடிகள் நீங்கும். சனி, குரு வக்ர கால கட்டத்தை யோகமாக மாற்றவும்.

இந்த கால கட்டத்தில் திருமண சுப காரிய முயற்சிகளை ஒத்திப்போடவும். சுப காரிய நிகழ்ச்சிகளை வக்ர நிவர்த்திக்குப் பிறகு வைத்துக்கொள்ளவும். வக்ர காலத்தை சுபமான காலமாக மாற்றவும். வீட்டின் பூஜை அறையில் நெய் தீபம் ஏற்றி வணங்கவும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு சனி பகவான் யோக காரகன் நன்மை செய்பவர் சனி வக்ரமடைவதால் பயப்பட வேண்டியதில்லை.

நீங்கள் நினைத்த காரியம் வெற்றிகரமாக நடைபெறும். வேலையில் புதிய முயற்சிகள் செய்யலாம். வெற்றிகரமாக முடிவடையும். உங்களின் உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும்.

தொழில் செய்பவர்கள் பெரிய அளவில் முதலீடு செய்யலாம். தொழில் வியாபாரத்தில் பண வரவு அதிகரிக்கும் கூடவே செலவும் வரும். உழைப்பு அதிகரிக்கும். வேலைப்பளுவும் கூடும். திடீர் அதிர்ஷ்டமும் லாபமும் வரும். பொருளாதார நிதி நெருக்கடிகள் நீங்கும்.

சனி, குரு வக்ர கால கட்டத்தை யோகமாக மாற்றவும். இந்த கால கட்டத்தில் திருமண சுப காரிய முயற்சிகளை ஒத்திப்போடவும். சுப காரிய நிகழ்ச்சிகளை வக்ர நிவர்த்திக்குப் பிறகு வைத்துக்கொள்ளவும்.

வக்ர காலத்தை சுபமான காலமாக மாற்றவும். வீட்டின் பூஜை அறையில் நெய் தீபம் ஏற்றி வணங்கவும்.

கடகம்

கடக ராசிக்கு சனி ஏழு மற்றும் எட்டாம் வீட்டு அதிபதி. வக்ரமடைவது நன்மையை செய்யும். சனி பகவான் வக்ரமடையும் போது நல்ல பலன்கள் நடைபெறும்.

கண்ட சனி நடைபெறுகிறது. இந்த நேரத்தில் சனிபகவான் வக்ரமடைந்து பயணிக்கிறார். கவனமாகவும் விழிப்புணர்வோடும் இருக்க வேண்டிய காலமாகும்.

குடும்பத்தில் உள்ளவர்களின் உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு அவசியம். குரு பகவானின் வக்ரமும் உங்கள் ராசிக்கு நன்மையே செய்யும். உங்களுக்கு வேலை தொழிலில் புதிய அளவில் மாற்றம் எதுவும் ஏற்படாது. அதே நேரத்தில் உங்கள் வாழ்க்கை துணையின் வேலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. செவ்வாய் பகவானின் சஞ்சாரம் உங்களுக்கு சாதகமாக உள்ளது.

கடகத்தைப் பொறுத்தவை சனி களத்திர காரகன் என்பதால் கணவன், மனைவி இடையே இருந்த ஆரோக்கிய பிரச்சினை சரியாகும். உங்களின் பணம் கையிருப்பை பத்திரமாக வைத்திருங்கள்.

திடீர் செலவுகள் வரலாம். சுப விரைய செலவுகளாக மாற்றுங்கள். உங்களின் தசாபுத்தி சரியாக இருந்தால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. அஷ்டம ஸ்தானத்தில் உள்ள குரு வக்ர நிலையில் சஞ்சரிக்கும் காலத்தில் பெரிய அளவில் முதலீடுகளைத் தவிர்க்கவும்.

பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தெளிவாகவும் விழிப்புணர்வோடும் இருந்தால் இந்த வக்ர காலத்தில் எளிதாக கடக்கலாம். உங்களின் சுய ஜாதகத்தில் சனி, குரு கிரகங்கள் எப்படி இருக்கிறது என்று பார்த்து அதற்கேற்ப பரிகாரம் செய்யலாம்.