இந்த 4 ராசியினர்கள் மிகுந்த இரக்கு குணம் உடையவர்களாம்.. ஏன் தெரியுமா?

ஒரு சில இராசிகள் ஒரே மாதிரியான குணாதிசயங்களை கொண்டிருப்பதும் சில சமயங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் இந்த சில ராசிகள் மிகுந்த இரக்க சுபாவம் உள்ளவர்களாக இருப்பார்களாம்..

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் மிகுந்த இரக்க சுபாவம் உள்ளவர்களாக இருப்பார்கள். இவர்கள் எந்த ஒரு பிரதிபலனும் எதிர்பார்க்காமல் உதவி என்று கேட்டு வருபவர்களுக்கு சட்டென தயங்காமல் உதவி செய்து விடுவார்கள்.

அதன் பின்னர் ஏமாற்றப்படும் பொழுது தான் சற்று எச்சரிக்கையாக இருந்திருக்கலாம் என்கிற உணர்வே இவர்களுக்கு தோன்றும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு அதீத இரக்க சுபாவம் இருக்குமாம். உடன் இருப்பவர்கள் மற்றும் நம்பிக்கைக்கு உரியவர்கள் எது சொன்னாலும் உடனே அதனை வேதவாக்காக நினைத்து நம்பி விடுவார்கள்.

உண்மை எது? பொய் எது? என்று இவர்களால் சட்டென யூகிக்க முடியாது. முன்பின் தெரியாதவர்கள் கூட உதவி என்று கேட்டு வந்தால் இல்லை என்று மறுத்து கூறுவதில்லை.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் அதிக புத்திக் கூர்மையுடன் இருந்தாலும் ஒரு சில விஷயங்களில் இவர்கள் கவனக் குறைவாக இருப்பது இவர்களின் பலவீனமாக இருக்கும்.

இவர்களுக்கு இருக்கும் பொறுப்புகளில் சில பகுதிகளை நம்பிக்கைக்கு உரியவரிடம் பிரித்துக் கொடுத்து விடுவார்கள். அவர்கள் இவர்களுக்கு தெரியாமல் சில மோசடி வேலைகளை செய்வது இவர்களுக்கு தெரிய வரும் பொழுது தான் உண்மை நிலையை உணர்வார்கள்.

மேலும், நட்பு, தொழில், குடும்பம் என்று எந்த வகையிலும் இவர்களுக்கு மற்றவர்கள் மேல் இருக்கும் அதிகப்படியான நம்பிக்கை இவர்களுடைய மிகப் பெரிய பலவீனமாக இருக்கும்.

மீனம்

ராசிகளில் கடைசியாக இருக்கும் மீன ராசிக்காரர்கள் எப்பொழுதும் எதிலும் நேர்மறையான சிந்தனைகளை கொண்டிருப்பார்கள்.

எந்த ஒரு விஷயத்தில் இருக்கும் நல்லதை மட்டுமே இவர்கள் எடுக்க கூடியவர்களாக இருப்பதால் அதில் இருக்கும் கெட்ட விஷயங்களை பற்றி கவலைப்படுவது இல்லை.

இந்த ஒரு சுபாவத்தால் நெருங்கிய நண்பர்கள் கூட இவர்களை எளிதாக ஏமாற்றி விட வாய்ப்புகள் இருக்கும். நல்லது, கெட்டது என்ற இரண்டு கோணங்களிலும் சிந்திக்கும் பொழுது தான் அந்த முடிவானது சரியாக அமையும்…

இந்த 4 ராசிக்காரர்கள் மட்டுமல்ல எல்லா ராசிக்காரர்களும் அப்படி தான். தங்களை சுற்றி இருப்பவர்கள் அனைவருமே நல்லவர்கள் தான் என்று எளிதாக நம்பிவிடக் கூடாது.

அதற்காக சதா எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட வேண்டிய அவசியமும் இல்லை. சாதுரியம் மற்றும் புத்திக்கூர்மை இரண்டுமே கொண்டு செயல்படும் பொழுது உங்களை வெல்ல எவரால் முடியும்?