அதிகம் சம்பாதிக்கக்கூடிய ராசிகள் யார் யார் தெரியுமா? எப்போதும் இவங்க கையில பணம் நிறைய இருக்கும்

ஜோதிடத்தின் அடிப்படையில் பல்வேறு விஷயங்களை ஆராய்ந்து சொல்ல முடியும்.

அதில் ஒரு சில ராசிகள் அதிகம் சம்பாதிக்கக்கூடியவர்களாக இருப்பார்கள்.

எந்த ராசியினரிடம் எப்போதும் பணம் நிறைய இருக்கும். எந்த வகையில் அதிகம் பணம் சம்பாதிப்பார்கள் என்பதைப் பார்ப்போம்.

மேஷம்

செவ்வாய் ஆளக்கூடிய நெருப்பு ராசியான மேஷம், பணத்தை அதிகம் சம்பாதிக்கக்கூடிய மிகவும் அதிர்ஷ்டசாலிகளாகக் கருதப்படுகிறார்கள். இந்த ராசியினர் பணம் சம்பாதிப்பதில் முன்னணியில் இருப்பார்கள்.

இவர்களுக்கு சூழல் அதிர்ஷ்டமானதாக இல்லாவிட்டாலும், இவர்களிடம் கடின உழைப்பையும், புதிய திறமையின் வலிமை அதிகமாக இருப்பதால் தங்கள் வாழ்க்கையில் சிறந்த நிலையை அடைந்து பணம் சம்பாதிக்கக்கூடியவர்களாக இருக்கின்றனர்.

அதுமட்டுமல்லாமல் தங்கள் வேலை, குறிக்கோள்களைப் பற்றி தெளிவாக இருப்பதோடு, விடாமுயற்சியுடன் வேலை செய்வார்கள்.

ரிஷபம்

அதிகம் பணம் சம்பாதிக்கும் பட்டியலில் ரிஷப ராசியினர் இரண்டாவது இடத்தில் உள்ளனர். இவர்கள் எந்த ஒரு தொழில், வியாபாரம், வேலை என எதுவாக இருந்தாலும் உற்சாகமாக செய்யக்கூடியவர்கள்.

ரிஷப ராசியினர் தங்கள் வாழ்க்கையின் தொடக்கத்தில் நிறைய கஷ்டங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். இருப்பினும், சில ஆண்டுகளிலேயே அவர்களின் கடின உழைப்பு மிகச்சிறப்பான பலனை அளிக்கும்.

சுக்கிர கிரகம் ஆளக்கூடிய இந்த ராசியினர் ஆடம்பர வாழ்க்கை, சுக போகத்தோடு இருக்க விரும்புவர். அதனைப் பெறுவதற்கான வாழ்க்கையில் நிறைய சம்பாதிக்கக்கூடியவர்களாகவும் இருப்பார்கள்.

சிம்மம் 

சிம்ம ராசியினர் சிறந்த ஆளுமை உடையவர்கள். இவர்களை யாரை விடவும் குறைவாக மதிப்பிட முடியாது. இந்த ராசியை சேர்ந்த பெண்கள் தங்கம் உள்ளிட்ட ஆபரணங்களில் அதிக ஆர்வம் இருக்கும்.

இவர்களுக்கு அதிர்ஷ்டமும் நிறைய ஆதரவளிப்பதாக இருக்கும். இவர்களிடம் ஒருபோதும் பணப்பற்றாக்குறை இருக்காது. இவர்கள் அதிகம் ஷாப்பிங் செய்ய ஆசைப்படுவார்கள்.

சில சமயங்களில் அவர்கள் தங்கள் பட்ஜெட்டை விட அதிகம் செலவழிக்கவும் செய்வார்கள்.

கடகம்

ஜோதிடத்தின் படி, மனோகாரகனான சந்திரன் ஆளக்கூடிய கடக ராசி பெரும்பாலானோர் நிதி நெருக்கடி என்பதே அறிந்திராதவர்களாக இருப்பார்கள். இவர்கள் தங்கள் துணையுடன் அதிகம் பயணம் செய்ய விரும்புவார்கள்.

இந்த விஷயத்தில் அதிர்ஷ்டமும் அவர்களுக்கு ஆதரவளிக்கிறது, ஒருபோதும் பணப் பற்றாக்குறை இல்லாமல் சிறப்பாக வாழ்வார்கள். பிறப்பிலேயே மிக அழகாக இருக்கக்கூடிய இவர்கள் அழகின் மீது அதிக பற்று கொண்டவர்கள்.

அதோடு தங்களை அழகுபடுத்திக் கொள்வதில், அது சார்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் கொண்டவர்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசியினர் சிறப்பாக பணம் சம்பாதிக்கக்கூடியவர்கள். இவர்கள் தங்கள் வாழ்வில் எந்த ஒரு வேலை, தொழில், வியாபாரமாக இருந்தாலும் அதில் நல்ல முன்னேறக்கூடியவர்கள்.

இவர்களுக்கு அதிர்ஷ்டம் சிறப்பாக இருப்பதோடு, பல ராஜயோகங்கள் கொண்டவர்கள். வெளிநாட்டு வியாபாரம் செய்யக்கூடியவர்கள் தங்கள் தொழிலில் முன்னேற்றம் ஏறிக்கொண்டே செல்லும்.