ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரத்தில் ஆடிப்பூரம் விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
அம்பாளின் அனுக்கிரகம் மிகுந்த நாள்களில் ஆடிப்பூரம் மிகவும் முக்கியமானது.
ஆடிமாத (Aadi) வெள்ளிக்கிழமைகளில் வரும் பூர நட்சத்திரம் மிகவும் சிறப்பானது.
காரணம் பூர நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிரன். எனவே, சுக்கிரனுக்கு உகந்த தினமான வெள்ளிக்கிழமையில் வரும் ஆடிப்பூரம் மிகவும் தவறவிடக் கூடாதது.
இன்றைய தினம் காலையிலேயே எழுந்து நீராடி தூய உடை அணிந்து விரதம் இருந்து அம்பாளுக்கு உகந்த பால்பாயசம் நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும்.
இந்த தினத்தில் புதிய வளையல்களை எடுத்துப் பூஜை அறையில் வைத்துப் பின் யாரேனும் சுமங்கலிகளுக்கும் கன்னிப் பெண்களுக்கும் வழங்குவதன் மூலம் வீட்டில் இருக்கும் வறுமைகள் நீங்கும் என்பது ஐதீகம்.
குழந்தைப்பேறு இல்லாதவர்கள் அம்மனுக்கு வளையல் வாங்கிக் கொடுத்தும், வீட்டில் இருக்கும் அம்பாளுக்கு வளையல் மாலை தொடுத்தும் வழிபடலாம்.
இப்படி செய்வதால் வீட்டில் எந்த வித பிரச்சனை இருந்தாலும் அவை உங்களை விட்டு விலகி ஓடும்.
செல்வ செழிப்பான வாழ்க்கை உங்களை வந்தடையும். நீண்ட ஆயுள் கிடைக்கும். அதிலும் மிக முக்கியமாக குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும்.