காலை எழுந்ததும் வெந்தயம் ஊறவைத்த தண்ணீர் கட்டாயம் குடிக்கனும்! ஏன்னு இத படிச்சு தெரிஞ்சிக்கங்க…

வெந்தய விதைகள் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. இது உணவுக்கு சிறந்த சுவையை அளிப்பதில் இருந்து பல்வேறு வகையான வியாதிகளை போக்குவது வரைக்கும் இதன் பயன்கள் ஏராளம்.

வெந்தயம் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. இதில் அதிக நார்ச்சத்துக்கள் உள்ளன.

எனவே தான் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கவும் எடையை குறைக்கவும் உதவுகிறது. மேலும் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கால அறிகுறிகளை குறைக்கவும் உதவுகிறது.

இப்படி ஏராளமான நன்மைகள் தரும் வெந்தயத்தை நீரில் ஊற வைத்து உண்பதால் கிடைக்கும் ஏராளமான நன்மைகள் குறித்து இன்னும் அறிந்து கொள்வோம்.

​நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது

இது நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. ஊற வைத்த வெந்தயம் உங்க இரத்த சர்க்கரை அளவில் மாற்றங்களை உண்டாக்கும். முளைத்த வெந்தய விதைகளை விட நனைத்த வெந்தய விதைகள் 30 – 40 சதவீதம் அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது.

​சீரண சக்தியை மேம்படுத்துகிறது

வெந்தயம் உங்க செரிமானத்திற்கு உதவுகிறது. அஜூரணம் போன்ற கோளாறுகளை போக்கி உணவு நல்ல செரிமானம் ஆக குடலியக்க செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. வெந்தயம் சூட்டை ஏற்படுத்தும் தன்மை கொண்டு இருப்பதால் மலச்சிக்கல், வயிறு வீக்கம் போன்ற பிரச்சனைகளை களைகிறது.

​கொழுப்பைக் குறைக்கிறது

நீரில் ஊற வைத்த வெந்தயம் உங்க கொழுப்பை குறைக்க உதவுகிறது. வெந்தயத்தில் நார்ச்சத்துக்கள் இருப்பதால் கொழுப்பைக் குறைத்து உங்க உடல் எடையையும் கட்டுக்குள் கொண்டு வர முடியும்.

​பக்கவாதத்திலிருந்து காக்கிறது

வெந்தய விதைகள் பல்நிறைவுற்ற கொழுப்பு அமிலங்கள், லினோலிக் அமிலம் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. பல ஆய்வுகளின் படி மூட்டி வலி மற்றும் மூட்டு வீக்கம் இவற்றை விரட்டுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.