வாக்கிய பஞ்சாங்கத்தின்படி இன்று குரு பெயர்ச்சி நிகழ்கின்றது. யார் யாருக்கு என்ன பலன்கள் என்பதை சுருக்கமாக பார்க்கலாம்.
மேஷம்
குரு உங்கள் ராசிக்கு தைரிய வீரிய ஸ்தானம் மீது விழுவதால் உங்கள் முயற்சிகள் சிறக்கும். தைரியமாக முடிவுகளை எடுத்து செயலில் இறங்குவீர்கள். குல தெய்வ வழிபாடு செய்வது அவசியம்.
ரிஷபம்
குரு 10ல் இருந்தால் பதவி பறிப்பார் என்பது விதி. அதனால் கவனமாக இருக்க வேண்டிய முக்கிய விஷயம் உங்கள் வேலை மற்றும் செய்யும் தொழில். குல தெய்வ வழிபாடு, பெருமாள் வழிபாடு செய்வது அவசியம். பிரதோஷ வழிபாடு நன்மை ஏற்படுத்தும்.
மிதுனம்
குரு பெயர்ச்சியால் அற்புத பலன்களைப் பெறப்போகும் அடுத்த ராசி மிதுனம். உங்களின் மதிப்பு, மரியாதை சமூகத்தில் அதிகரிக்கும். குரு, புதன் வழிபாடு செய்வதும், இஷ்ட தெய்வங்களைத் தொடர்ந்து வழிபட்டு வருவதால், உங்கள் வெற்றிக்கு எந்த தடையும் ஏற்படாது.
கடகம்
திட்டமிடப்படாத திடீர் செலவு வீண் செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சிலர் தேவையில்லாமல் வாய் கொடுத்து வம்பு வழக்குகளை சந்திக்க நேரிடும். சில விபத்து கண்டங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் கவனம் தேவை. பெண் தெய்வங்களை குறிப்பாக சக்தியின் ரூபங்களை வழிபட்டு வர உங்கள் பிரச்னைகள் நீங்கும்.
சிம்மம்
காரியத் தடை நீங்கி சிறப்பாக இலக்கை அடைந்து பெயர், புகழுடன் செம்மையாக வாழ்வீர்கள். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும்.
கன்னி
உங்களின் கடன் பிரச்சினை அதிகரிக்கும். உங்களின் செலவுகள் அதிகரிக்கும். சிலருக்கு திருமணம் போன்ற சுப காரியங்கள் தள்ளிப்போக வாய்ப்புள்ளது. முடிந்த வரை கடன் வாங்குவதைத் தவிர்ப்பது அவசியம். முடிந்தால் திருப்பதி சென்றுவருவது உத்தமம்.
துலாம்
திருமண தடை நீங்கும், வரன் அமையும். கனவு நினைவாகும். சிலருக்கு வெளிநாட்டில் நிரந்தரமாகத் தங்க அனுமதி கிடைக்கும். எந்த ஒரு போட்டி, தேர்வுகளில் சிறப்பான மதிப்பெண் பெற்று நினைத்த வாய்ப்புகளைப் பெறுவீர்கள். விருச்சிகம்
தனுசு
வீண் செலவுகள் ஏற்படும். கெளரவத்திற்காக சில செலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் நல்ல பெயரும், பதவி உயர்வையும் எதிர்பார்க்கலாம். துர்க்கை, காளி போன்ற ஆக்ரோஷமான தெய்வங்களை வணங்கி வருவது நல்லது.
மகரம்
குருவின் பார்வை பலன் மோசமான பலனைத் தான் மகர ராசிக்கு தருவதாக இருக்கும். சிவ பெருமானை வழிபடுவதும், உங்கள் இஷ்ட தெய்வத்தை வழிபட்டு வாருங்கள். குரு பகவானை வழிபட்டு வாருங்கள்.
கும்பம்
ஜென்ம குருவாக இருந்தாலும், குழந்தை பேறு உண்டாகும். திருமண தடை சந்தித்து வந்தவர்களுக்கு நல்ல வரன் அமையும்.
மீனம்
தொழிலில் திடீர் திருப்பங்கள் நிகழ்வதால் மன அமைதியற்ற நிலை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திடீர் பிரச்னைகள் ஏற்படும். வேலையிழப்பு, திடீர் இடமாற்றம் போன்றவற்றால் மிகவும் பாதிக்கப்படுவீர்கள். இஷ்டதெய்வம், குலதெய்வ வழிபாடு செய்து வருவது நல்லது.