மின்னல் வேக குருப்பெயர்ச்சி பலன்கள் – மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கும் ஏற்பட போகும் திடீர் மாற்றம்

குருப்பெயர்ச்சி நிகழ்ந்துள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கும் மின்னல் வேக குருப்பெயர்ச்சி பலன்களை பார்க்கலாம்.

மேஷம்
இது உங்களுக்கு பொன்னான காலம். இந்த காலத்தில் வரும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள். நல்லது நிறைய நடைபெறும்.

ரிஷபம்
பதவியில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வேலையில் கவனமும் நிதானமும் தேவை. உயரதிகாரிகள் சொல்வதை கேட்டு நடப்பது நல்லது.

மிதுனம்
பாக்ய குரு ஆன்மீக பயணத்தை தருவார். வெளிநாட்டு வேலை கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

கடகம்
அஷ்டம ஸ்தானத்தில் பயணிக்கும் குரு திடீர் ராஜயோகத்தை தருவார்கள். திருமணமாகி நீண்ட நாட்களாக பிள்ளை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியத்தை தருவார்.

சிம்மம்
குரு உங்கள் ராசியை நேரடியாக பார்வையிடுகிறார். குருபார்வை கிடைத்தாலே வாழ்க்கை பொன்னாக ஜொலிக்கும். 12 ராசிகளில் அதிக பலனை அடையப்போவது சிம்ம ராசிக்காரர்கள்தான்.

கன்னி
அலுவலகத்தில் உயரதிகாரிகளால் தொல்லைகள் ஏற்படும். சிலருக்கு ஜாதகத்தில் குரு இருக்கும் நிலையைப் பொருத்து வேலை பறிபோகவும் வாய்ப்பு உள்ளது.

துலாம்
குருவால் பிள்ளைகள் வாழ்க்கையில் சுப காரியங்கள் ஏற்படும். கையில் இருக்கும் பணத்தை சொந்த பந்தங்களுக்கு கடனாகத் தர வேண்டாம்.

விருச்சிகம்
பல ஆண்டு காலமாக கஷ்டங்களை மட்டுமே சந்தித்து வரும் உங்களுக்கு இனி வரும் காலங்கள் பாதிப்பை குறைத்து சந்தோஷத்தை அதிகரிக்கும்

தனுசு
பொறுமையும் நிதானமும் தேவை. குரு மூன்றில் மறைவதால் முயற்சிகளை கை விட வேண்டாம். காலம் கடந்தாலும் வெற்றி கிடைக்கும் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டமாகும்.

மகரம்
குருவினால் லாபம் அதிகரிக்கும். இனி தடைகள் நீங்கி நன்மைகள் நடைபெறும். நல்ல காரியங்கள் நடைபெறும்.

கும்பம்
ஜென்ம குரு கவனம் தேவைப்படும். தொழில், வேலையில் கவனம் தேவை. பெரிய அளவில் அகலக்கால் வைக்க வேண்டாம்.

மீனம்
விரைய குருவால் செலவு அதிகரிக்கும். தங்க ஆபரணங்கள் வாங்கலாம். கூட்டுத் தொழில் செய்ய சரியான நேரமில்லை. பணத்தை இழக்க நேரிடும். அரசு வேலைக்கு முயற்சி செய்யலாம்.