இந்த குருப்பெயர்ச்சியினால் கோடீஸ்வர யோகம் அடையப்போகும் அந்த 6 ராசியினர்கள் யார்?

குரு பெயர்ச்சியானது ஆண்டிற்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு பெயர்ச்சி அடைவார். இந்த முறை குரு கும்ப ராசியில் அமர்ந்திருப்பதால் குருவின் அதிசார காலம் மிகவும் அதிகமாக இருக்கிறது. இதன் மூலம் ஆறு ராசிக்காரர்கள் அதிக அளவு நன்மையை அடையப் போகிறார்கள்.

மேஷம்

மேஷ ராசியினர்களுக்கு, அதிபதியான செவ்வாய் குரு பகவானின் நண்பர் ஆவார். இதனால், அளப்பரிய நன்மைகள் இவர்களுக்கு நடக்கப்போகிறது. உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.

நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியமும் வெற்றியில் முடியும். தைரியமாக பல முடிவுகளை எடுத்து செயல்படுவீர்கள். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். காதல் கைகூடும்.

திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் கைகூடும். மேலும், சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். புகழ் கிடைக்கும். பொதுவாக நீங்கள் செய்யும் அனைத்துமே வெற்றியாக அமையும்.

மிதுனம்

அஷ்டம சனியால் குடும்பத்தில் பிரச்சனை, சிக்கல், போன்ற இன்னல்களில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் மிதுன ராசிக்காரர்களுக்கு குருவின் பார்வை 5-ம் இடத்தில் விழுவதால் இவ்வாறான இன்னல்களிலிருந்து விடுபட போகிறீர்கள்.

இதனால், அஷ்டம சனியின் பாதிப்பு பெருமளவில் குறையும். திருமண தடைகள் விலகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். பெரியவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். உங்கள் இஷ்ட தெய்வத்தை மனதார வணங்கி வந்தால் நீங்கள் விரும்பியதை அடைய முடியும்.

சிம்மம்

சிம்ம ராசியினர்களுக்கு, குருவின் நேர் எதிர் பார்வையான ஏழாம் பார்வை கிடைத்துள்ளது. இது மிகவும் விசேஷமானது. செய்கின்ற வேலை, தொழில் அனைத்தும் சிறப்புடன் செயல்படும். தள்ளிப் போன திருமணங்கள் நடைபெறும். நல்ல வாழ்க்கை துணை உங்களுக்கு அமைவார்கள். சொத்து பிரச்சனை இருந்தால் அவை தீர்ந்து விடும். புதிய சொத்துக்கள் வாங்கும் வாய்ப்புகள் உங்களை தேடி வரும்.

துலாம்

துலாம் ராசியினர்களுக்கு குருபகவான் தடை ஸ்தனமான நான்காம் இடத்தில் அமர்ந்து இருந்தார். ஆனால் தற்போது ஐந்தாம் இடத்திற்கு செல்கிறார். இதனால், தடைப்பட்டுக் கொண்டிருந்த அனைத்து காரியங்களும் சுமூகமாக நடைபெறும். செய்யத் துவங்கும் அனைத்து காரியங்களும் வெற்றி பெறும்.

மேலும், சம்பாதித்த பணத்தை செலவழிக்க ஒன்றுக்கு இரண்டு முறை யோசிப்பார்கள். திருமணத்திற்காக இருப்பவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். தேர்வு எழுதுபவர்கள் நல்ல மதிப்பெண் பெறுவீர்கள்.

தனுசு

தனுசு ராசியினர்கள் நீங்கள் எந்த ஒரு முயற்சி செய்தாலும் அது வெற்றிபெறும். திருமண தடைகள் நீங்கும். தொழிலில் இருக்கின்ற பிரச்சனைகள், தடைகள் விலகி நல்ல பலன் கிடைக்கும்.

மேலும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். தொழிலில் புதிய கூட்டாளிகள் கிடைப்பார்கள். அல்லது பழைய கூட்டாளிகள் ஆதரவாக இருப்பார்கள். கல்வி தேர்விலும் மிகவும் சிறப்பாக இருப்பீர்கள்.

கும்பம்

கும்ப ராசியினர்கள் ஜென்ம குருவாக இருந்தாலும் குருவின் பார்வை 5, 7, 9 ஆகிய இடங்களில் அமைவதால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

அடுத்து, சொத்துப் பிரச்சனைகள் விலகும். திருமணத்திற்கு நல்ல வரன் கிடைக்கும். இதுவரையிலும் சனியின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட கும்ப ராசியினருக்கு நல்ல ஒரு ஆறுதல் கிடைக்கும். இந்த குருபெயர்ச்சி உடையவர்கள் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் கொடுக்கக்கூடியதாக அமையும்.