எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 5 ராசிக்கு ஒரு வரியில் பரிகாரம்… பேராபத்தில் சிக்க போவது யார்?

விருச்சிகத்தில் சூரியன் சஞ்சரிக்கக்கூடிய காலம் கார்த்திகை மாதம் என அழைக்கப்படுகிறது.

இதன் காரணமாக சில ராசிகளுக்கு நன்மையான பலன்களும், சில ராசியினர் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

இந்த பதிவில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் குறித்து விரிவாக பார்ப்போம்.​

மேஷம்
மனம் மற்றும் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். மன அமைதியுடன் இருக்க முயலவும்.

பரிகாரம் – காலையில் சூரிய உதயத்தில் பிராணாயாமம் செய்யவும்.

ரிஷபம்
கூட்டுத் தொழில் செய்பவர்கள் தங்கள் கூட்டாளியை கண்மூடித்தனமாக நம்புவதைத் தவிர்க்க வேண்டும், இல்லையெனில் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.

பரிகாரம் – தாய், தந்தை மற்றும் பெரியோரை மதித்துச் செயல்படுவதோடு, அவர்களின் ஆசியைப் பெறுங்கள்.​

மிதுனம்
இந்த மாதத்தில், எதிர் பாலினத்தவர்களுடன் பேசும் போது, வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும், இல்லையெனில் அவதூறு ஏற்படலாம்.

பரிகாரம் – சூரியன் மூல மந்திரம் “ஓம் ஹ்ரெளம் ஸ்ரீம் ஆம் க்ரஹாதி ராஜாய ஆதித்யாய ஸ்வாஹா” மந்திரத்தை தினமும் காலையில் உச்சரிக்கவும்.

துலாம்
உங்கள் வார்த்தைகளில் கவனம் தேவை. மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும்.

பரிகாரம் – ஞாயிற்றுக்கிழமை ஏழைகளுக்குத் தேவையான பொருட்கள், உணவு தானம் செய்யுங்கள்.​

தனுசு
வெளி நாடு தொடர்பான வியாபாரம் செய்பவர்கள் அல்லது வெளிநாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் பலன் பெற வாய்ப்புள்ளது.

பரிகாரம் – ஞாயிற்றுக்கிழமை விரதம் இருக்கவும்.