இந்த வருடத்தின் கடைசி சூர்ய கிரகணம்: இந்த 5 ராசிக்காரங்க அதிக ஜாக்கிரதையா இருக்கனுமாம்!

இந்த ஆண்டின் கடைசி சூர்யகிரகணம் டிசம்பம் மாதம் 4ம் திகதி நிகழவிருக்கின்றது. ஒரு பகுதி சூர்ய கிரகணமாக இருக்கும் இந்த கிரகணத்தில் சில ராசிகளுக்கு கெட்ட விளைவுகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.

குறிப்பாக, கீழே கொடுக்கப்பட்டிருக்கும் 5 ராசிக்காரர்களுக்கு, இந்த சூரிய கிரகணம் அசுப நிகழ்வுகளின் காரணியாக மாறுவதால் கவனமாக இருக்க வேண்டுமாம்.

2021 ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் 4 டிசம்பர் 2021 நிகழும் நாளில் கார்த்திகை மாத கிருஷ்ண பக்ஷத்தின் அமாவாசை தினமாகும்.

குறித்த கிரகணம் டிசம்பர் 4 ஆம் தேதி காலை 10:59 மணிக்கு தொடங்கி மதியம் 03:07 மணிக்கு முடிவடையும். குறித்த கிரகணம் எந்த ராசிக்கு உகந்தது அல்ல என்பதை கீழே தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
அசுபமானதாக இருக்கும் இந்த சூர்ய கிரகணத்தில் ஆரோக்கியத்தில் சில மோசமான விளைவு ஏற்படுவதுடன், சில விபத்தக்களும் நடைபெற வாய்ப்புள்ளலதால் கவனமாக இருக்கவும்.

கடகம்
கடக ராசிக்கும் அசுப பலனைத் தரும் இந்த கிரகணத்தின் போது குடும்பம், நண்பர்கள் என அனைவரிடமும் வாக்குவாதங்களை தவிர்ப்பதுடன், குழந்தைகளையும் கவனமாக கவனித்துக் கொள்ளவும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களை ஏற்படுத்தும் இந்த கிரகணத்தின் போது, கோபப்படுவதோ, மற்றவர்களை திட்டவதாலோ பிரச்சினையில் சிக்கிக் கொள்ளலாம். ஆரோக்கியத்திலும் சில விளைவுகளை சந்திக்கலாம்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த சூர்ய கிரகணம் பதற்றம், அமைதியின்மை, குழப்பம் என மிகுந்த தாக்கத்தினை ஏற்படுத்தும். வேலை செய்யும் இடத்தில் பொறுமையாக இருக்கவும்.

தனுசு
இந்த கிரகணத்தின் போது தனுசு ராசிக்காரர்களுக்கு, அலைச்சல், தேவையில்லாத செலவுகள் அதிகரிப்பதுடன், எடுத்த காரியத்தினை முடிக்க கடினமான உழைப்பு அவசியமாக உள்ளது.