கிரகங்கள் ஒரு கிரகத்தில் இருந்து இன்னொரு கிரகத்திற்கு இடம் பெறுவது வழக்கம். அதனால் பிலவ வருடம் நாளை ஞாயிற்றுக்கிழமை அன்று கார்த்திகை மாதத்தில் துலாம் ராசியில் இருந்து செவ்வாய் பகவான் விருச்சிக ராசிக்கு காலை 6:21 மணிக்கு இடம் பெயர்கிறார். 12 ராசியில் எந்த ராசிக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கப்போகிறது என்பதை பற்றி பார்ப்போம்…..
மேஷம்
மேஷ ராசியினர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி அதிர்ஷ்டம் தரும் பெயர்ச்சியாக இருக்கும். கணவன், மனைவிக்குள் இருந்து வந்த சண்டை, சச்சரவுகள் படிப்படியாக குறையும். ஆரோக்கியத்தில் இதயம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் கூடுமானவரை உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்வது நல்லது.
மிதுனம்
மிதுன ராசியினர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி அதிர்ஷ்டமான பெயர்ச்சியாக இருக்கப் போகிறது. வீடு நிலம் வீட்டை புனரமைக்கும் பணி போன்றவற்றில் இருந்து வந்த தடைகள் அகன்று நல்ல பலன்கள் கிடைக்கும். தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் வெற்றி காணும் யோகம் உண்டு. பொருளாதார ரீதியான முன்னேற்றம் படிப்படியாக உயரும்.
கன்னி
கன்னி ராசியினர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி சாதகமான பலன்களைக் கொடுக்க இருக்கிறது. திடீர் பண வரவு ஏற்படும். கிடைக்க வேண்டிய இடத்தில் இருந்து கிடைக்க வேண்டிய தொகை கிடைக்கும். குடும்பத்தில் புதிய வரவு ஒன்று ஏற்படும். கணவன் மனைவி பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியினர்களுக்கு செவ்வாய் பகவான் இடம் பெயர்வதால் இளைய சகோதரர் வகையில் சில மனக்கசப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. வருமான ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத திடீர் இடமாற்றம் உண்டாகும். அலுவலக விஷயங்களை வெளியில் பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பது நல்லது. பூர்வீக சொத்துக்கள் அனுகூல பலன் கொடுக்க போகிறது.
தனுசு
தனுசு ராசியினர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி விளையாட்டுத் துறையில் இருப்பவர்களுக்கு அதிர்ஷ்டமான பலன்களை கொடுக்க இருக்கிறது. கணவன், மனைவிக்குள் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். பெண்களுக்கு வீட்டு தேவைகள் பூர்த்தியடையும். ஒரு சிலருக்கு பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். எதிர்பார்க்கும் அதிர்ஷ்ட வாய்ப்புகள் இல்லம் தேடி வரும்.
மீனம்
மீன ராசியினர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி அதிர்ஷ்ட பலன்களை அள்ளிக் கொடுக்க போகிறது. கணவன் மனைவிக்குள் இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். வெளியிட பயணங்கள் மூலம் அனுகூல பலன் உண்டாகும். மேலும், புதிய நட்பு வட்டம் விரிவடையும். தொழில் ரீதியான வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். பெரிய தொகையை ஈடுபடுத்தி அதிக லாபம் காண்பீர்கள்.