நிகழ்வுள்ள 2022-ஆம் ஆண்டில் சனிபகவான் இருமுறை தன் நிலையில் இருந்து மாறவுள்ளார். இதன்போது சனிபகவான் ராசியையும் மாற்றவுள்ளார். இந்த மாற்றத்தின் போது அனைத்து ராசிகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். இவற்றில் 8 ராசிகள் மீது இந்த வருடம் முழுவதும் சனியின் கண் பார்வை இருக்குமாம்.
இந்நிலையில், 2022- ஆம் ஆண்டு ஏப்ரல் 29-ம் திகதி சனிபகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்குள் நுழைய இருக்கிறார். மேலும் கும்ப ராசி அவரது சொந்த ராசியாகும். சனிபகவான் இந்த ராசிக்குள் 30 வருடங்களுக்குப் பிறகு பிரவேசிக்கப் போகிறார்.
இதேவேளை, சனிபகவான் கும்ப ராசியில் நுழைந்தவுடன் கடகம், மற்றும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனியின் தாக்கம் ஆரம்பமாகும்.
இதனையடுத்து, மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனியும் தொடங்கும். ஏழரை நாட்டு சனி இந்த ராசிக்காரர்களை பல வழிகளில் தொந்தரவு செய்யும். ஆனாலும், கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் நன்றாக இருக்கும். சனிபகவான் தனது ராசியான கும்ப ராசிக்காரர்களிடம் கருணை காட்டுவார். அவர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசிக்கச் செய்வார்.
மேலும், மிதுனம் மற்றும் துலாம் ராசிக்காரர்கள் மற்றும் தனுசு ராசிக்காரர்களுக்கும் சனிபகவானின் ஏழரை நாட்டு சனி நிறைவடையும். இந்த நிவாரணம் அவர்களுக்குப் பல நன்மைகளைத் தரும்.
2022-ஆம் ஆண்டில், சனிபகவானின் நிலையில் இரண்டாவது மாற்றம் 12 ஜூலை 2022 அன்று நிகழவுள்ளது. இந்த நாளில் சனிபகவான் பின் நோக்கி நகர்ந்து முந்தைய ராசியான மகர ராசிக்குள் நுழைவார். இந்த பெயர்ச்சியால், தனுசு, மிதுனம் மற்றும் துலாம், ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் மீண்டும் தொல்லைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்நிலையில், ஜனவரி 17, 2023 வரை சனிபகவான் இந்த ஸ்தானத்தில் இருப்பார். எனினும் இக்காலத்தில் மீனம், கடகம், விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனியின் தோஷம் நீங்கி நல்ல பலன்கள் கிடைக்கும்.