தற்போது நடக்கின்ற கலியுகத்தில் எல்லாமே அவசரகதியில் நடந்து கொண்டிருக்கின்றது.
ஜோதிடத்தின் படி கலி என்று பார்த்தால் அது சனி பகவான். சனியின் பிடியில் இருப்பதால் சனி யுகம் என்று கூட சொல்லலாம்.
சனி மந்தன் அதாவது மெதுவாக செய்யக்கூடியவர் என்றாலும், அவர் பார்த்தால் எல்லாம் அவசர கதி, வக்ரகதி என்ற நிலையில் தான் எல்லாம் நடக்கும்.
இந்த சனியுகத்தில் பெண்களுக்கு 23 வயதிற்குள் திருமணம் செய்து முடித்துவிட வேண்டும் என ஒரு கணக்கு கூறுகிறார்கள்.
இதுவே பெரியளவில் சாத்தியமில்லாமல் செயலாக இருக்கிறது.
அதிலும் ஆண்களுக்கு எத்தனை வயதிற்குள் திருமணம் செய்துவிட வேண்டும் என ஒரு வரைமுறை இல்லாமல் சென்று கொண்டிருக்கின்றது.
இந்த கலிகாலத்தில் முன்பை விட தற்போது இளைஞர்களுக்கு மட்டுமில்லாமல் சிறுவர்களிடமும் பாலியல் உணர்வு அதிகரித்துள்ளது. அதனால் தேசத்தில் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.
பாலியல் குற்றங்களைத் தடுக்கும் வண்ணம் தான் அரசே மாணவர்கள் மத்தியில் பாலியல் குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்த பள்ளிகளிலேயே அதுகுறித்து பாடம் நடத்தப்படுகின்றன.
பொதுவாக ஒருவருக்கு 22 அல்லது 23 வயதில் திருமணம் முடித்து வைப்பது நல்லது.
அந்த வயதில் தான் ஒவ்வொரு கிரகத்தினுடைய ஆளுமை அதிகமாக இருக்கும். அதிலும் சுக்கிரன் மற்றும் ராகுவின் சேர்க்கையுடன் கூடிய காலம் 20 வயது முதல் 24 வயதிற்குள் ஒருவருக்கு வருவதால் ஒவ்வொருவருக்கும் பாலியல் கிளர்ச்சி உண்டாகிறது.
இந்த காலத்தில் சரியான பாதையை தேர்வு செய்து ஒழுக்கமாக காலத்தை நகர்த்துவது அவசியம். இல்லையென்றால் ஆபத்து. பாதை மாறக்கூடிய வாய்ப்பு உள்ளது.
ஆண்களுக்கு 24 வயது முதல் 27 வயதுக்குள் திருமணம் முடித்து வைப்பது நல்லது. ஏனெனில் இந்த காலத்தில் குருபகவானின் ஆதிக்க எண்ணாக வருகிறது.
அதுமட்டுமல்லாமல் ஒருவருக்கு குரு திசை நடக்கும் போது திருமண சுப காரியத்திற்கான முயற்சிகள் எடுத்தால் விரைவாக திருமணம் நடந்து முடியும். அதனால் இதில் திருமணம் செய்தால் சிறப்பாக இருக்கும்.