சூரியன் மற்ற கிரகங்களைப் போலவே, ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும். அதுவும் ஒவ்வொரு மாதமும் சூரியன் இடம் பெயரும். சூரியன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி சூரியன் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு செல்கிறார். இந்நாளில் தான் தமிழ் மாதமான மார்கழி பிறக்கிறது.
இதேவேளை, சூரியன் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு செல்வதால், ஒவ்வொரு ராசிக்காரரும் எம்மாதியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என மார்கழி மாத ராசிபலனை இப்போது காண்போம்.
மேஷம் : மேஷ ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்வதால், மேஷ ராசிக்காரர்களான உங்களுக்கு அற்புதமானதாக கருதப்படுகிறது. இக்காலத்தில் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். இக்காலத்தில் செல்வத்தை குவிப்பீர்கள் மற்றும் சமூக வட்டத்தில் மரியாதை அதிகரிக்கும்.
பணியிடத்தில் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள் மற்றும் பதவி உயர்வைப் பெறவும் வாய்ப்புள்ளது. இதேவேளை உங்கள் தந்தையின் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள்.
ரிஷபம் : ரிஷப ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்வதால் ரிஷப ராசிக்காரர்களான நீங்கள் வெளிநாடு செல்ல திட்டமிடுவீர்கள். பணியிடத்தில் உங்களின் முழு கவனமும் செல்வத்தை அதிகரிப்பதில் இருக்கும். கடின உழைப்பிற்கான நல்ல பலனைப் பெறுவீர்கள்.
நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்களின் உதவியுடன் எதிர்பார்த்த வேலை வாய்ப்புக்கள் கிடைக்கும். புதிய நண்பர்களை உருவாக்குவீர்கள்.முக்கியமாக எளிதில் எரிச்சலடைவீர்கள் என்பதால் அமைதியாக இருக்க முயலுங்கள்.
மிதுனம் : மிதுன ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்வதால் மிதுன ராசிக்காரர்களான நீங்கள் மிகுந்த ஆற்றலுடன் இருப்பீர்கள். இருப்பினும் கோபமும் அதிகமாக வரும். உங்களின் நகைச்சுவை உணர்வால் மற்றவர்களை ஈர்ப்பீர்கள்.
திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். இருப்பினும் சில ஈகோ பிரச்சனையால் உங்களுக்கு பிரச்சனை வரக்கூடும் என்பதை, அதை தவிர்க்க முயற்சி செய்யுங்கள். வெளிநாட்டில் பணிபுரிபவர்கள் வெற்றியை காண்பார்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, தசை வலி அல்லது முதுகு வலியால் பாதிக்கப்படலாம் என்பதால் சற்று கவனமாக இருங்கள்.
கடகம் : கடக ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்வதால் கடக ராசிகாரர்களான நீங்கள் வலிமை மற்றும் தைரியம் நிறைந்தவராக இருப்பீர்கள். உங்கள் எதிரிகளை தோற்கடித்து வெற்றி பெறுவீர்கள். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் படிப்பில் சிறப்பாகச் செயல்படுவார்கள். இக்காலத்தில் நன்கு சம்பாதிப்பீர்கள். அதே வேளையில் நிறைய செலவுகளையும் செய்வீர்கள்.
ஆனால் இக்காலத்தில் உங்கள் பணத்தை சூதாட்டத்தில் அல்லது டிரேடிங்கில் வைக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. ஏனெனில் இந்த காலகட்டத்தில் பண இழப்பிற்கு வாய்ப்புள்ளது. எச்சரிக்கையாக இருங்கள்.
சிம்மம் : சிம்ம ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்வதால் சிம்ம ராசிக்காரர்களான உங்களுக்கு இக்காலம் அதிர்ஷ்டமானதாக மற்றும் சாதகமானதாக இருக்கும். கடந்த காலத்தில் நீங்கள் செய்த கர்ம செயல்களின் நேர்மறையான முடிவுகளைப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு அற்புதமான காலம்.
இக்காலத்தில் மத செயல்களில் நாட்டம் அதிகரிக்கும். மேலும் உங்கள் அணுகுமுறையை உங்கள் அன்பானவர்கள் பாராட்டாமல் இருப்பதால், இருவருக்கும் இடையே மோதல்கள் ஏற்படலாம்.
கன்னி : கன்னி ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்வதால் கன்னி ராசிக்காரர்களான உங்களின் மனநிலை கணிக்க முடியாததாக இருக்கும். சில நேரங்களில் அதிகமாக உணர்ச்சிவசப்படுவீர்கள். சில நேரங்களில் எரிச்சலடைவீர்கள். நிம்மதியாகவே இருக்கமாட்டீர்கள் மற்றும் அதிக மன அழுத்தத்துடன் இருப்பீர்கள்.
இக்காலகட்டத்தில் உங்கள் தாயுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவீர்கள். நீங்கள் புகைப்பிடிப்பவராக இருந்தால், இக்காலத்தில் நுரையீரல் தொடர்பான உடல்நல பிரச்சனைகள் வரக்கூடும். எனவே இப்பழக்கத்தைக் கைவிடுங்கள்.
துலாம் : துலாம் ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்வதால் துலாம் ராசிக்காரர்களான நீங்கள் தைரியம் நிறைந்து இருப்பீர்கள் மற்றும் யாருக்கும் பயப்படமாட்டீர்கள். உங்கள் எதிரிகளை வெல்வீர்கள். என்ன தான் வெளியே கோபக்காரராக தெரிந்தாலும் மென்மையான இதயத்தைக் கொண்டிருப்பீர்கள்.
இக்காலத்தில் புதிய செல்வாக்குமிக்க நண்பர்களை உருவாக்குவீர்கள். அந்த நண்பர்களால் ஆதாயத்தைப் பெறுவீர்கள். தந்தையின் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள். ஒட்டுமொத்தமாக இக்காலம் உங்களுக்கு சாதகமான காலமாக இருக்கும்.
விருச்சிகம் : விருச்சிக ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்வதால் விருச்சிக ராசிக்காரர்களான நீங்கள் அதிக ஆற்றலுடன் இருப்பீர்கள். உங்கள் தொழிலில் இருந்து நல்ல வருமானத்தை ஈட்டுவீர்கள். குடும்பத் தொழிலில் ஈடுபடுபவர்கள் பிரகாசிப்பார்கள். பணம் தொடர்பான விஷயங்களால் நீங்கள் மன உளைச்சலுக்கு ஆளாகலாம்.
நீண்ட கால முதலீடு அல்லது சொத்து வாங்க திட்டமிட்டால், இந்த நேரம் சாதகமாக இருக்கும். ஏனெனில் இந்த காலத்தில் நீங்கள் செய்யும் ஒப்பந்தங்கள் மூலம் எதிர்காலத்தில் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள்.
தனுசு : தனுசு ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் செல்வதால் தனுசு ராசிக்காரர்களான நீங்கள் மிகவும் அன்பாகவும், உண்மையானவராகவும் இருப்பீர்கள். உங்களின் நகைச்சுவை உணர்வு மற்றும் வசீகரமான ஆளுமை மூலம் அனைவரையும் கவர்வீர்கள். ஆனால் சில நேரங்களில் பொறுமையிழந்து மோசமாக நடந்து கொள்வீர்கள். உங்கள் திருமண வாழ்க்கையில் நல்லிணக்கம் இருக்கும்.
ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, வயிறு தொடர்பான பிரச்சனைகள் மற்றும் அசிடிட்டி பிரச்சனையால் பாதிக்கப்படலாம் என்பதால், இக்காலத்தில் ஆரோக்கியமான உணவுகளை மட்டும் சாப்பிடுங்கள்.
மகரம் : மகர ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்வதால் மகர ராசிக்காரர்களான நீங்கள் ஆரோக்கியத்திற்காக செலவிட வேண்டியிருக்கும். வருமானத்தை விட செலவுகள் அதிகமாக இருக்கும்.
சூதாட்டத்தில் உங்கள் பணத்தை வைக்க இது நல்ல நேரம் அல்ல. தூக்கமின்மை, கண்பார்வை மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனைகளால் நீங்கள் பாதிக்கப்படலாம் என்பதால் உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
கும்பம் : கும்ப ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்வதால் கும்ப ராசிக்காரர்களான நீங்கள் அதிக செல்வத்தைப் பெறுவீர்கள். பணியிடத்தில் சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருக்கும். இக்காலத்தில் பதவி உயர்வு அல்லது வருமான உயர்வு கிடைக்கும்.
திருமணமானவர்கள் தங்கள் துணையுடன் அழகான பந்தத்தைப் பகிர்ந்து கொள்வார்கள். இருப்பினும் வேலை சுமையால் சில சிக்கல்களை சந்திப்பீர்கள். இருந்தாலும், உங்கள் துணை உங்களைப் புரிந்து உங்களுக்கு ஆதரவாக இருப்பார்.
மீனம் : மீன ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்வதால் மீன ராசிக்காரர்களான நீங்கள் அதிகாரம் மிக்கவராக இருப்பீர்கள். தொழில் வாழ்க்கையில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். சொல்லப்போனால் வலிமை மிக்கவராக இருப்பீர்கள். தொழிலதிபர்கள் தங்கள் தொழில் அல்லது வியாபாரத்தில் புகழ் பெறுவார்கள்.
வேலை தேடுபவர்களுக்கு சாதகமான காலமாக இருக்கும். இந்த காலத்தில் நீங்கள் அடிக்கடி கோபப்படலாம். இது உங்களின் வேலையை கெடுக்கலாம். கவனமாக செயற்படுங்கள்.