2022-ம் புத்தாண்டுக்கு பின் மிதுன ராசியினர்களுக்கு ஏற்படப்போகும் மாற்றங்கள் என்னென்ன?

2022-ம் ஆண்டில் மிதுன ராசியினர்களுக்கு இதுவரை கடந்து வந்த பாதைகளை எளிதாக மாற்ற போகிறது. இதுவரை பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்ட நீங்கள் இனி வரும் ஆண்டு சிறப்பாக அமையப்போகிறது. பொருளாதார ரீதியில் அதிர்ஷ்டம் எப்பொழுதும் உங்களுக்கு கிடைக்கும்.

குடும்பத்தைப் பொறுத்தவரை மிதுன ராசிக்காரர்களுக்கு அற்புத பலன்களை கொடுக்கும் ஆண்டாக அமைகிறது. குடும்பத்தில் மங்களகரமான நிகழ்ச்சிகள் நிறைய நடைபெற இருக்கிறது. தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடி வரும் யோகமுண்டு.

மேலும், பொருளாதார ரீதியாக மிதுன ராசிகாரர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டு. தொழில் ரீதியான புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரத்தை, தொழிலை விரிவுபடுத்தும் எண்ணத்தில் இருப்பவர்களுக்கு சாதகப் பலன்கள் உண்டு.

அக்டோபர், நவம்பர் மாதங்களில் எதிர்பாராத திருப்பம் உண்டாகும். வியாபாரம், தொழில், உத்தியோகம் போன்றவற்றில் இருக்கும் மிதுன ராசிக்காரர்களுக்கு சராசரியான சூழ்நிலை நிலவும். புதிய தொழில் துவங்க நினைப்பவர்கள் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து அதற்கான முயற்சிகளை ஆரம்பிக்கலாம்.

முன்பின் தெரியாதவர்களின் அறிமுகத்தை கூடுமானவரை சந்தேகிப்பது நல்லது. கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். பழைய பாக்கிகள் வசூலாகும். ஆரோக்கியத்தில் ஆண்டின் துவக்கத்தில் சாதகமற்ற பலன்களை கொடுக்கும்.

சனி பகவான் ஆரோக்கிய ரீதியான பாதிப்புகளை அவ்வபோது ஏற்படுத்துவார். 6-ஆம் இடத்தில் கேது சஞ்சரிப்பதால் உணவு பழக்கத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. கணவன், மனைவிக்கு இடையே உணர்ச்சிப் பெருக்கான சம்பவங்கள் நடைபெறும்.

ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்வீர்கள். போட்டியும், பொறாமையும் கொண்டிருந்த கணவன் மனைவிக்கு இடையே அவை நீங்கி பரஸ்பர ஒற்றுமை நீடிக்கும். திருமணமாகாதவர்களுக்கு கூடிய விரைவில் உங்கள் துணையை சந்திக்கும் அற்புத வாய்ப்புகள் ஆண்டின் துவக்கத்திலேயே அமையும்.

பரிகாரம்

சனி பகவான் தொழில் மற்றும் ஆரோக்கிய ரீதியாக சில பாதிப்புகளை ஏற்படுத்துவார் என்பதால் சனிக்கிழமை தோறும் சனி வழிபாடு செய்து வாருங்கள். பின்னர், காக்கைக்கு எள் சோறு வையுங்கள்.

ஏப்ரல் மாதத்திற்கு பிறகு ஓரளவுக்கு நல்ல பலன்களை பெற இருக்கிறீர்கள் எனவே தடைகள் ஏற்படாமலிருக்க செவ்வாய் கிழமையில் ஆறுமுகனுக்கு விளக்கேற்றி வழிபட்டு வாருங்கள்.