வீட்டில் ஆட்டிப்படைக்கும் ராகு, கேது: பிரச்சினையிலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?

நவக்கிரங்களில் ராகு கேதுவால் மனக்கசப்பும், கருத்து வேறுபாடும் நிலவும். அதைப் போக்க, வீட்டில் இந்த ஒரு விஷயத்தை செய்தால் போதும்

ராகு-கேது வாழ்க்கையில் பதற்றத்தை ஏற்படுத்தும் என்று பல ஜோதிடர்கள் நம்புகிறார்கள். ராகு-கேதுவால் ஏற்படும் பின்னடவைப் போக்க, வீட்டில் வழிபாடு செய்து துர்பலன்களை போக்குகின்றனர்.

ஒரு சிறிய பரிகாரம் ராகு-கேதுவின் எதிர்மறை பலன்களை நீக்கும்.

ஜோதிடத்தில் ராகு மற்றும் கேதுவின் அசுப பலன்கள் மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது. சாதகமற்ற ராகு-கேது ஒரு நபரின் வாழ்க்கையில் பல சிரமங்களை உருவாக்குகிறது. பல ஜோதிடர்கள் ராகு-கேது வாழ்க்கையில் பதற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறார்கள்.

ஆனால் ஒரு மணியால், ராகு-கேதுவின் எதிர்மறையான விளைவுகளை அகற்றலாம் தெரியுமா?

வீட்டில் தினமும் மணி அடிப்பது ராகு மற்றும் கேதுவின் கோபத்தை தணிக்கும். இதற்குக் காரணம் மணி என்பது நாக ரூபமான ராகு மற்றும் கேதுவுடன் தொடர்புடையது.

வீட்டில் தினசரி பூஜையின்போது மணி அடிப்பது செல்வத்தின் கடவுளான லட்சுமியின் அருளை பெற்றுத்தரும்.

பூஜை நேரத்தில் மணி அடிப்பதால் பல வகையான பாவங்கள் அழியும், வீட்டில் நேர்மறையான அற்றல் பெருகும் என்பதும், மணியை அடிப்பதன் மூலம் தெய்வ வழிபாடு வெற்றி பெறும் என்பதும் நம்பிக்கை.

மணி அடிப்பதற்கு அறிவியல் காரணங்கள் உள்ளன. விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, மணியை அடிப்பதன் மூலம் உருவாகும் அதிர்வுகள் சுற்றுச்சூழலில் இருக்கும் கிருமிகளை அழிக்கின்றன. இதனால் சுற்றுப்புறச் சூழல் தூய்மையாகவும் புனிதமாகவும் மாறுகிறது.

விஷ்ணுவின் வாகனமான கருடனுடன் தொடர்புடையது மணி என்பது மத நம்பிக்கை ஆகும். வீட்டில் தினமும் மணி அடிப்பதால் விஷ்ணுவின் அருள் நிலைத்திருக்கும்.

இறைவனின் அருள் பூரணமாக நிறைந்திருக்கும்போது ராகு-கேது அமைதியாகிவிடுகிறார்கள். எனவே, பூஜை அறையில் இருக்கும் மணி, சோதனைகளை போக்கும் பொருட்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

சந்தையில் பல வகையான மணிகள் கிடைக்கின்றன. தினசரி வழிபாட்டில் பயன்படுத்தப்படும் மணியின் கருடன் சின்னம் இருப்பது நல்லது. தினசரி வழிபாட்டில் கருடன் சின்னம் கொண்ட மணியை அடிப்பது நல்லது.