கன்னி புத்தாண்டு 2022 விருச்சிக ராசியில் இருக்கும் கேட்டை நட்சத்திரத்தில் கன்னி லக்கினத்தில் பிறக்கிறது.
2022ம் ஆண்டு சனி பகவான் தன்னுடைய நிலையிலிருந்து இரண்டு முறை மாறுவார் என்பதால் ஒவ்வொரு ராசிக்கும் பெரியளவிலான தாக்கத்தை ஏற்படுத்துவார்.
இப்படிப்பட்ட சூழலில் 2022 ல் சனி பகவான் தான் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து அதிசாரமாக அடுத்த ராசிக்கு சென்று பின் வக்கிரமாக மீண்டும் பழைய இடத்திற்கு திரும்புவார். சனியின் பார்வையால் பெரியளவிலான தாக்கம் சில ராசிகள் மீது நிகழ உள்ளது.
2022 ஏப்ரல் மாதத்தில் சனி பகவான் மகரத்திலிருந்து, கும்ப ராசிக்கு அதிசாரமாக நுழைய உள்ளார்.
இதுவும் சனி பகவானின் சொந்த ராசியாகும். 30 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த பெயர்ச்சி நிகழ உள்ளது.
தனுசு
துலாம்
கன்னி
மிதுனம்
ரிஷபம்
மேஷம்
ஆகிய ராசிகளுக்கு 12 ஜூலை 2022 வரை நற்பலன்கள் கிடைக்கும்.
கெடுபலன்கள் பெற உள்ள ராசிகள் கும்ப ராசிக்கு அதிசாரமாக செல்வதால் மீன ராசிக்கு ஏழரை சனி தொடங்கும். அதோடு கடக ராசிக்கு அஷ்டம சனி பலன் உண்டாகும்.
விருச்சிக ராசிக்கு அர்த்தாஷ்டமச் சனி பலன் உண்டாகும்.
சிம்ம ராசிக்கு கண்டக சனி பலன் ஏற்படும்.