புத்தாண்டு 2022 பலன்கள் – கும்ப ராசிக்கு காத்திருக்கும் யோகம் என்ன?

பிறக்கும் 2022 புத்தாண்டின் முதல் கும்ப ராசிகாரர்களுக்கு அற்புத பலன்கள் கிடைக்க இருக்கிறது. மற்றவர்களுடைய கருத்துகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் கும்ப ராசிக்காரர்கள் தங்களுடைய கருத்துகளை முன் வைப்பதிலும் தயங்குவதில்லை.

குடும்பத்தைப் பொறுத்தவரை கும்ப ராசிக்காரர்களுக்கு சுமூகமான சூழ்நிலை நிலவ இருக்கிறது. பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும். உற்றார், உறவினர்கள் மூலம் அனுகூல பலன்கள் உண்டு. போதுமான நேரத்தை குடும்பத்திற்காக செலவிடுவது நல்லது.

இந்தாண்டு உங்களுக்கு எதிர்பாராத திடீர் நல்ல விஷயங்கள் குடும்பத்தில் நடக்க இருக்கிறது. புதிய நபரின் வருகை உண்டு. குழந்தைகள் விஷயத்தில் கூடுதல் பொறுப்புணர்வுடன் செயலாற்றுவது நல்லது.

கடந்த 2021-ம் ஆண்டில் நீங்கள் தேவையற்ற இழப்புக்களைச் சந்தித்து இருப்பீர்கள். ஆனால் 2022ஆம் ஆண்டில் பொருளாதாரம் உங்களுக்கு பொறுப்பு சுமையை குறைக்க இருக்கிறது.

தொழில் ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும் என்றாலும் வாடிக்கையாளர்கள் இடத்தில் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்க இருக்கிறது.

கணவன், மனைவிக்கு இடையே இருக்கும் காதல் மேலும் அதிகரிக்கும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்வீர்கள். மனைவி வழி உறவினர்கள் மூலம் ஆதாயம் உண்டு.

திருமணமாகாதவர்களுக்கு மனதிற்கு பிடித்த நபரை திருமணம் புரிய நிறைய போராட்டங்களை சந்திக்க வேண்டியிருக்கும். புதன் கிழமையில் புத பகவானை வழிபடுவது சிறப்பு.

மேலும் உங்கள் ராசிக்கு 2022 இரண்டாம் ஆண்டு மகாலட்சுமிக்கு நெய் தீபம் போடுவது நல்ல பலன்களை அள்ளிக் கொடுக்கும்.