புது வருஷம் பொறந்தாச்சு… சனியின் ஆக்ரோஷ பார்வையில் சிக்கிய 5 ராசிகள் யார் யார்? உடனே தப்பிக்க இத செய்யுங்க

2022 ஆம் ஆண்டு சனிக்கிழமை அன்று பிறந்திருக்கின்றது.

சனி பகவானுக்கு மிகவும் பிடித்த நாளான சனிக்கிழமை அன்று புத்தாண்டு பிறப்பதால், இந்த 2022 ஆம் ஆண்டு இன்னும் சிறப்பானதாக கருதப்படுகிறது.

பொதுவாக சனிக்கிழமைகளில் நல்ல விஷயங்களை செய்தால், சனிபகவானின் பாச பார்வையைப் பெறலாம். அதுவே கெட்ட விஷயங்களை செய்தால், சனியின் கோபப் பார்வையை பெறக்கூடும்.

உங்கள் மீது சனியின் கோப பார்வை விழாமல் இருக்க  செய்யக்கூடாத விஷயங்களைக் காண்போம்.

 5 ராசிகளின் மீது சனியின் பார்வை

  1. சனியின் முதல் பார்வை மிதுனம் மற்றும் துலாம் ராசியிலும்
  2. ஏழரை சனி தனுசு, மகரம், கும்பம் ஆகிய ராசிகளிலும் நடக்கிறது.
  3. ஆகவே ஜனவரி 01, 2022 அன்று சனிபகவானை இந்த 5 ராசிக்காரர்கள் வணங்கினால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

செய்யக்கூடாதவை

  1.  கடினமாக உழைப்பவர்களை ஒருபோதும் காயப்படுத்தாதீர்கள்.
  2. கடினமாக உழைப்பவர்களை மதிக்க வேண்டும்.
  3. பொருளாதாரத்தில் பலவீனமாக இருப்பவர்களை ஒருபோதும் கேலி செய்யக்கூடாது.
  4. விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு தீங்கு செய்யாதீர்கள்.
  5. சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காதீர்கள்.
  6. போதைப் பழக்கம், தவறான சகவாசம் மற்றும் கெட்ட பழக்கங்களிலிருந்து விலகி இருங்கள்.

புத்தாண்டான இன்று செய்ய வேண்டியவை

  1. சனி பகவான் கோவிலுக்கு சென்று சனி பகவானை வழிபடலாம்.
  2. கடுகு எண்ணெயை சனி பகவானுக்கு வழங்கலாம்.
  3. கருப்பு உளுத்தம் பருப்பை தானமாக வழங்கலாம்.
  4. கருப்பு நிற போர்வையை ஏழை எளியோருக்கு தானமாக வழங்கலாம்.
  5. சனி சாலிசா அல்லது சனி ஆரத்தியை சனிக்கிழமைகளில் பாராயணம் செய்யலாம்.
  6. நோயாளிகளுக்கு சேவை செய்யலாம்.