இந்த மாதம் நிறைய கிரக மாற்றங்கள் உள்ளன.
மிதுனம்,கடகம், சிம்மம், கன்னி ராசிகளில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் நிறைய நன்மைகளும் சில பாதிப்புகளும் கலந்த மாதமாக உள்ளது.
எந்த ராசிக்காரர்களுக்கு என்ன மாதிரியான பலன் கிடைக்கும் என்று தனித்தனியாக பார்க்கலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு குரு பலன் குதூகலத்தை தரும். கோபத்தை தவிர்ப்பது நல்லது. தேவையற்ற பேச்சுக்களை பேச வேண்டாம் வேலை செய்யும் இடத்தில் சிக்கலை ஏற்படுத்தி விடும்.
எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவெடுக்கவும். பொறுமையும் நிதானமும் தேவைப்படும் மாதம்.
அனுமனை வழிபட அற்புதங்கள் நடைபெறும்.
கடகம்
கண்டச்சனி காலம் என்பதால் பொறுமை அவசியம். திருமணத்திற்காக வரன் பார்க்க இது சரியான மாதமல்ல. உடல் ஆரோக்கியத்தில் சில பாதிப்புகள் வரலாம் திடீர் மருத்துவ செலவுகள் வரலாம். பெண்களுக்கு மன அழுத்தம் உடல் நல பாதிப்பு வரலாம் கவனம் தேவை.
சுபகாரியங்கள் நடைபெறுவதில் அதிக தடை ஏற்படலாம்.
குல தெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்டு வர பாதிப்புகள் நீங்கி நன்மைகள் நடைபெறும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு அற்புதமான மாதம் குருவின் பார்வையில் இருக்கும் உங்களுக்கு வேலையில் திடீர் மாற்றங்கள் ஏற்படும். புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். பண நெருக்கடிகள் நீங்கும்.
செயல்களில் வெற்றி வாய்ப்புகள் தேடி வரும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் என்றாலும் வேலைப்பளுவினால் சில பாதிப்புகள் வரலாம். மொத்தத்தில் இந்த ஜனவரி மாதம் சிம்ம ராசிக்காரர்களுக்கு பொருளாதார வளம் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது.
லட்சுமி நரசிம்மரை வழிபட வெற்றிகள் தேடி வரும்.
கன்னி
ஜனவரி மாதம் கன்னி ராசிக்காரர்களுக்கு நற்காரியங்கள் அதிகம் நடைபெறப்போகிறது. முயற்சிகளுக்கு வெற்றிகள் கிடைக்கும். சுபகாரியங்கள் கை கூடி வரும். குருவின் பயணம் ஆறாம் வீட்டில் இருந்தாலும் சனிபகவான் சஞ்சாரம் சாதகமாக உள்ளது.
கோபத்தை குறைத்து நிதானத்தைக் கடைபிடிக்கவும். ஜனவரி மாதத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு மாற்றங்களும் புதிய முயற்சிகளுக்கு வெற்றிகளும் கிடைக்கும் மாதமாக அமைந்துள்ளது.
பெருமாள் கோவிலுக்கு சென்று தவறாமல் வழிபட நன்மைகள் நடைபெறும்.