சனி பகவான் ஆனவர் நீதியின் கடவுள். கலியுகத்தில் சனி பகவான் நவகிரகங்களில் நீதிபதி என அழைக்கப்படுகிறார். தீங்கான செயல்களை செய்யும் ஜாதகக்காரர்கள் மீது சனி பகவான் தன்னுடைய தசை, அந்தரதசை, ஏழரை நாட்டு சனி ஆகியவற்றின் மூலம் அசுப பலன்களை வழங்குகிறார்.
இப்பதிவில், சனி பகவானின் கொடூரமான பார்வைக்கு ஆளாகும் நபர்கள் யார்? யார் மீது சனீஸ்வரரின் கோவமான பார்வை படுகிறது? என்பதை பற்றி பார்ப்போம்.
சுயநலமாக இருப்பவர்களையும், மற்றவர்களிடம் பொய் சொல்பவர்களையும் சனி பகவான் தண்டிக்கிறார். பிறருக்குத் தீமை செய்பவர்களையும், பிறர் முதுகுக்குப் பின்னால் அவர்களைப் பற்றி பேசுபவர்களையும் சனி பகவான் தகுந்த முறையில் தண்டிக்கிறார். நிதி இழப்பு, குடும்ப தகராறு அல்லது நோய் போன்றவற்றின் மூலம் இந்த தண்டனையை நிறைவேற்றுகிறார்.
அடுத்ததாக திருட்டு, வழிப்பறி, மது அருந்துதல், விபச்சாரம் போன்ற தவறான பழக்கங்களைக் கொண்டுள்ளவர்கள் மீதும் சனி பகவானின் கோவம் பாய்கிறது. அவர்களை எப்போதும் நோயாளியாகவும் ஏழைகளாகவும் வைத்திருப்பார்.
சனி பகவான் நீதியின் கடவுள். ஏழை மற்றும் நலிந்த மக்களுக்கு அவர் ஆதரவாக இருப்பவர். பலவீனமானவர்களை துன்புறுத்துபவர்களையும் ஏழைகளை துன்புறுத்துபவர்களையும் அவர் ஒருபோதும் மன்னிப்பதில்லை.
இப்படிப்பட்டவர்கள் வாழ்க்கையில் சனி பகவானின் கோவப்பார்வைக்கு ஆளாக நேரிடுகிறது. மேலிம், தங்கள் கடமையை செய்யாதவர்கள், கடி உழைப்புக்கு அஞ்சுபவர்கள், வேலை செய்யாமல் இருப்பதற்கு சாக்குப்போக்குகளைக் கண்டுபிடித்து, சோம்பேறித்தனத்தைக் காட்டுபவர்கள்
ஆகியோருக்கு சனீஷ்வரர் ஒருபோதும் சுப பலன்களைத் தருவதில்லை. இதனால் இவர்களது வாழ்க்கையில், ஏழ்மை, நிதி பற்றாக்குறை ஆகியவை ஏற்படுகின்றன.