இந்த திகதியில் பிறந்தவர்களா நீங்கள்? அப்படியானால் இந்த ஆண்டு பல பிரச்சினைகளை சந்திப்பீர்களாம்!

2022 ஆம் ஆண்டில் ஒருவரது வாழ்க்கையில் எப்படிப்பட்ட பிரச்சினைகளை சந்திக்க கூடும் என்பதை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.

எண் 1 (1, 10, 19, 28)

அதிக பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுங்கள். ஜங்க் உணவுகளைத் தவிர்த்திடுங்கள். இந்த ஆண்டில் சில விபத்துக்களை சந்திக்க வாய்ப்புள்ளதால், கவனமாக இருங்கள். அதோடு உங்கள் கண்கள் மற்றும் மன ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள். மேலும் உங்களுக்கு உயர் இரத்த அழுத்த பிரச்சனை இந்த ஆண்டில் ஏற்பட வாய்ப்புள்ளது.

எண் 2 (2, 11, 20, 29)

இந்த தேதிகளில் பிறந்தவர்கள் இந்த ஆண்டு கவனக்குறைவாக இருக்கக்கூடாது. உங்கள் ஆரோக்கியத்தை கண்காணித்தவாறு இருங்கள். இல்லாவிட்டால் பிரச்சனையை சந்திக்க நேரிடும்.

இந்த ஆண்டில் உங்கள் பெற்றோர், உங்கள் குழந்தைகள் மற்றும் உங்களின் உடல்நிலை சீராக இருக்கும். தினமும் 30 நிமிடம் நடைப்பயிற்சியை மேற்கொண்டால், அது உங்கள் ஆரோக்கியத்தில் அதிசயத்தை ஏற்படுத்தும்.

எண் 3 (3, 12, 21, 30)

இந்த தேதிகளில் பிறந்தவர்கள் இந்த ஆண்டில் மன அழுத்தம் மற்றும் உங்களின் மன ஆரோக்கியத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். மனதை அமைதியாக வைத்திருக்க தியானம் மற்றும் நடைப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.

மது அருந்துவது, எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது. இல்லாவிட்டால், வயிறு தொடர்பான பிரச்சனைகளை இந்த ஆண்டில் சந்திப்பீர்கள்.

எண் 4 (4, 13, 22, 31)

இந்த தேதிகளில் பிறந்தவர்கள், 2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சருமம் மற்றும் குடல் பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. உங்கள் குடும்பத்தினர்கள் சில உடல்நல பிரச்சனைகளை சந்திக்கலாம். ஆனால் ஜூன் மாதத்தில் இருந்து அனைத்தும் சரியாகிவிடும். மன அழுத்தத்திற்கு தள்ளும் விஷயங்களில் இருந்து விலகி, எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்யுங்கள்.

எண் 5 (5, 14, 23 )

இந்த தேதிகளில் பிறந்தவர்கள் மன அழுத்தம், அவசரம், கோபம் போன்றவற்றில் இருந்து விலகி இருப்பது நல்லது.

ஏனெனில் இவைகளால் தான் உங்கள் எதிரிகள். மேலும் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்துக் கொள்ள உங்களை நீரேற்றமாக வைத்திருங்கள். அதோடு தியானம், யோகா போன்றவற்றை செய்யுங்கள்.

எண் 6 (6, 15, 24)

இந்த தேதிகளில் பிறந்தவர்கள் இந்த ஆண்டு மனதிற்கு அமைதியைத் தரும் நல்ல பழக்கங்களான புத்தகங்களைப் படிப்பது, யோகா, தியானம் செய்வது மற்றும் அதே சிந்தனையைக் கொண்டவர்களுடன் நட்பு வைத்துக் கொள்வது நல்லது.

மேலும் தினமும் காலையில் எழுந்த பின்பும், தூங்குவதற்கு முன்பும் தியானம் செய்வதை வழக்கமாக கொள்ளுங்கள். இது மன பதற்றத்தைத் தவிர்க்க உதவும்.

மேலும் இந்த ஆண்டில் குடல் பிரச்சனைகளை சந்திக்கலாம் எனவே இந்த ஆண்டு ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுங்கள் மற்றும் புகைப்பழக்கத்தைத் தவிர்த்திடுங்கள்.

எண் 7 (7, 16, 25)

இந்த தேதிகளில் பிறந்தவர்கள் ஸ்டெராய்டுகள் மற்றும் செயற்கை புரோட்டீன் எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. மேலும் எண்ணெயில் பொரித்த உணவுகள் மற்றும் ஜங்க் உணவுகளில் இருந்து முடிந்தவரை விலகி இருங்கள்.

குடல் மற்றும் சரும பிரச்சனைகளைத் தவிர்க்க, ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்கள். அதோடு தினமும் யோகா செய்வதை வழக்கமாக கொண்டால், மன அழுத்தத்தில் இருந்து விலகி இருக்கலாம்.

எண் 8 (8, 17, 26)

இந்த தேதிகளில் பிறந்தவர்கள் குடும்பத்தின் ஆரோக்கியத்தை நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும். ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ முயற்சி செய்யுங்கள். இந்த ஆண்டில் சிறுசிறு உடல்நல பிரச்சனைகளை அதிகம் சந்திக்கமாட்டீர்கள்.

மொத்தத்தில், 2022-ல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். அதற்காக அசால்டாக இருக்கக்கூடாது. ஆரோக்கியமான உணவுகளை உண்டு, நல்ல தூக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.

எண் 9 (9, 18, 27)

இந்த தேதிகளில் பிறந்தவர்கள், உடலை நன்கு கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள தினமும் உடற்பயிற்சியை செய்ய வேண்டும். இந்த ஆண்டில் முதுகு அல்லது முழங்காலில் சில பிரச்சனைகளை சந்திக்கலாம்.

ஆனால் அவை விரைவில் சரியாகிவிடும். முக்கியமாக டான்சில்லிடிஸ் நோயால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புள்ளதால் குளிர்பானங்களைத் தவிர்த்திடுங்கள். முடிந்தவரை பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் பேக்கேஜ் செய்யப்பட்ட உணவை தவிர்த்திடுங்கள். மன அழுத்தத்தைத் தவிர்த்து மகிழ்ச்சியாக இருங்கள்.