வருகிற ஜனவரி 14ம் தேதி காலை 5:29 மணிக்கு உதயமாகும் சுக்கிரனின் பலன் அனைத்து ராசிகளிலும் எதிரொலிக்கும் என்றாலும், கீழே குறிப்பிட்டுள்ள நான்கு ராசிக்காரர்களுக்கு அதிகப்பலன்களை அள்ளிக்கொடுக்க போகிறது.
அவை எந்த ராசிகள்? என்னென்ன பலன்கள்? என்பதை தெரிந்து கொள்ளலாம்.
மிதுனம்
சுக்கிரனின் உதயத்தால் பணி உயர்வு நிச்சயம் உண்டு, சம்பள உயர்வு பற்றிய நல்ல செய்தியும் கிடைக்கும்.
சுக்கிரனின் உதயம் வியாபாரம் செய்பவர்களுக்கு சாதகமாக இருக்கும். வருமானம் அதிகரித்து பெரிய ஒப்பந்தங்களைப் பெறலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களின் வேலையில் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும், இதனால் அவர்களின் சம்பளமும் அதிகரிக்கும்.
வியாபாரிகள் கடன் தொல்லையிலிருந்து விடுபட்டு, எதிர்காலத்துக்கான தொகையையும் சேமிக்கக்கூடியளவு பணம் கிடைக்கும்.
புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு லாபத்தை ஈட்டிதரும்.
சிம்மம்
வேலை தேடுபவர்களுக்கும் வேலை மாற விரும்புபவர்களுக்கும் நல்ல செய்தி கிடைக்கும். இட மாற்றத்திற்காக காத்திருக்கும் அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.
சொந்த தொழில் செய்பவர்களுக்கு வியாபாரத்தில் அபரிமிதமான லாபம் உண்டாகும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களின் வியாபாரத்தில் நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.
வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு, அவர்கள் நினைத்தபடியே நல்ல வேலைக்கான அழைப்பு வரலாம்.