ஜனவரி 14ம் திகதி சூரியன் மற்றும் உக்கிர சனி மகர ராசியில் சஞ்சரிக்கிறார்.
29 ஆண்டுகளுக்குப் பிறகு இம்முறை பொங்கலுக்கு சூரியன் – சனி சேர்க்கை ஏற்பட் உள்ளது.
அதன்படி தற்போது சூரிய – சனி கிரகங்கள் சேர்க்கை ஏற்பட்டால் எப்படிப்பட்ட பலன் குடும்ப உறுப்பினர்களுக்குக் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.
மேஷம் – இந்த ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் உயர் அதிகாரியுடன் தகராறு ஏற்படலாம். திருமண வாழ்க்கையில் பலவிதமான பிரச்சனைகள் வரும்.
ரிஷபம் – தொழிலில் வெற்றி பெறுவீர்கள், ஆனால் இதற்காக நீங்கள் வெகுதூரம் பயணிக்க வேண்டியிருக்கும். வெளியூர் செல்லவும் வாய்ப்பு உண்டு.
மிதுனம் – கூட்டுத் தொழிலில் அபரிமிதமான லாபம் கிடைக்கும். உடல் நலம் பாதிக்கும். தந்தையின் சொத்துக்களால் லாபம் உண்டாகும். ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.
கடகம் – காதல் உறவில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மனைவியுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். வாழ்க்கைத் துணையின் உடல்நிலை மோசமடையக்கூடும்.
சிம்மம் – உத்யோகத்தில் புதிய பொறுப்பு கிடைக்கும். இது தவிர தொழிலில் வளர்ச்சி ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படும். தினமும் உடற்பயிற்சி செய்வது பலன் தரும்.
கன்னி – பங்குச் சந்தையில் பணத்தை முதலீடு செய்வதைத் தவிர்க்கவும். குடும்பத்தில் உள்ள குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்து நீங்கள் கவலைப்படலாம். காதல் வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும்.
துலாம் – திருமண வாழ்வில் சில பிரச்சனைகள் ஏற்படும். நிலம் தொடர்பான வேலைகளில் கவனமாக இருக்க வேண்டும். தாயாரின் உடல்நிலை குறித்து அதிகம் கவனம் தேவை. தொழிலில் திடீர் மாற்றம் ஏற்படும்.
விருச்சிகம் – வியாபாரம் தொடர்பாக வெகுதூரம் பயணிக்க வேண்டியிருக்கும். குடும்பத்தில் சகோதர உறவு மோசமடையலாம். ஆவணங்கள் தொடர்பான வேலைகளில் கவனமாக இருங்கள். உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்படலாம்.
தனுசு – திடீர் பண ஆதாயம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும்.
மகரம் – பணி இடத்தில் வாக்குவாதம் ஏற்படலாம். தனிப்பட்ட வாழ்க்கையில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
கும்பம் – தூக்கமின்மை பிரச்சனையால் நீங்கள் சிரமப்படுவீர்கள். வேலைக்காக வெளியூர் செல்லலாம். மருத்துவமனையில் சேர்க்க வேண்டியிருக்கலாம். தொண்டு பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள்.
மீனம் – அபரிமிதமான நிதி ஆதாயம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும்.