செவ்வாய்கிழமையில் இதையெல்லாம் செய்தால் இவ்வளவு நன்மையா?

வாரத்தில் ஏழு நாட்களும் சிறப்பானவை. ஒவ்வொரு நாளும் கடவுளுக்கு உகந்த நாளாகவே கருதப்படுகிறது. அதில், மங்களகாரகன் என்று அனைவராலும் போற்றப்படுவது செவ்வாய் கிழமையை தான்.

புனிதமான இந்த கிழமையைத்தான் பலரும் விரதமிருப்பார்கள். முருகனுக்கும், அம்மனுக்கும் உகந்த கிழமை. இந்நாளில், ஆடை உடுத்துவதில் இருந்து, புதிய பொருள்கள் வாங்கும் வரை இந்நாளை சிலர் தேர்வு செய்வர்.

கேரள மக்கள் செவ்வாய்க்கிழமையில் திருமணம் நடத்துகின்றனர். செவ்வாயையும், முருகப்பெரு-மானையும், பூமாதேவியையும் வழிபட்டு செவ்வாயில் மங்கலப்பொருள் வாங்கினால் பன்மடங்கு பெருகுவதோடு, எல்லாச் சிறப்புகளும் நம்மைத் தேடி வருமாம்.

மேலும், செவ்வாய் என்றாலே மங்களகரமான வார்த்தை என்று முன்னோர்கள் சொல்வார்கள். செவ்வாய்க்கிழமையன்று எதையும் செய்ய விரும்பாதவர்கள் வாழ்க்கையில் முழுபலனை அனுபவிக்கவே முடியாது என்றும் சொல்வதுண்டு.

செவ்வாய்க்கிழமையன்று மெளனவிரதம் அனுஷ்டித்தால் யாகம் செய்தபலனை ஒருவர் அடையலாம். செவ்வாய் தோஷத்திற்கான பரிகார சாந்தி, துர்கா ஹோமம், ஜென்ம நட்சத்திரத்தின் அடிப்படையில் செய்யும் ஆயுஷ்ய ஹோமம் , சஷ்டி அப்த பூர்த்தி போன்றவற்றைச் செய்யலாம்.

மனையடி சாஸ்திரம் செவ்வாயன்று பூமி பூஜை செய்வது நல்லது என்றே கூறுகிறது. பயணங்களில் கிழக்கு திசை நோக்கிய பயணம், செவ்வாயன்று இருந்தால் உறுதியான வெற்றியைத் தரும் என்பது ஐதீகம்.

கடைசியாக தினம் நாம் செய்யும் செயல்கள் தொடரும் என்பதால்தான் கடன் வாங்கியவர்கள் கடனைத் திருப்பித் தரும் போது செவ்வாய்க்கிழமை தந்தால் வெகு சீக்கிரமே கடன் அடையும் என்பார்கள்.