கொரோனா அறிகுறிகள் தெரிகிறதா? தப்பிப்பது எப்படி? இதோ சில எளிய வீட்டு வைத்தியங்கள்

கடந்த இரண்டு ஆணுடுகளுக்கு முன்பு சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், அப்படியே ஒவ்வொரு நாடுகளிலும் பரவி, உருமாறு வெவ்வேறு விதங்களில் தீவிரமாக பரவி வருகிறது.

சமீபத்தில், தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகமாகி வருவதால், மூன்றாவது தடுப்பூசி, அதாவது பூஸ்டர் ஊசி போடுவது கட்டாயம் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் கொரோனா அறிகுறிகள் பற்றிய பல தகவல்களை ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர். அப்படி கொரோனா அறிகுறிகள் கொண்டவர்கள், ஆரம்பத்திலே அதை அறிந்து கொண்டால் கீழே சொல்லப்படும் சில விஷயங்களை பின்பற்றவதன் மூலம் அதில் இருந்து நாம் தப்பிக்க முடியும் என்றூ மருத்துவர்கள் கூறுகின்றனர்.

  • வெதுவெதுப்பான உப்பு நீரில் வாயை, மூன்று முதல் நான்கு முறை கொப்பளிக்கவும். வாய் கொப்பளிப்பதன் மூலம் சில மணி நேரங்களுக்கு உமிழ் நீர் வைரஸின் தாக்கத்தை குறைக்கும்.
  • நீராவி பயன்படுத்திய பிறகு கொரோனா நோயாளிகளின் அறிகுறிகள் குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.இது தொற்று நோய்க்கு ஆளாகாமல் ஆரோக்கியமான சுவாசக் குழாயைப் பராமரிப்பதற்கு உதவுகிறது. குளிர்ந்த நீர் மற்றும் குளிரூட்டப்பட்ட பானங்களைக் குடிப்பதற்கு பதிலாக வெது வெதுப்பான நீரை அடிக்கடி பயன்படுத்தும் படி அறிவுறுத்தப்படுகிறது.
  • தினமும் குறைந்தது ஐந்து நிமிடங்களாவது சில சுவாசப் பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள், முக்கியமாக அந்த பயிற்சிகள் உங்களுக்கு இலகுவாக இருக்க வேண்டும். இந்த பயிற்சி தொற்று கடுமையாக பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகளையும் குறைக்கலாம்.
  • எங்கும் செல்லாமல் வீட்டிலிருந்து வேலை செய்வதால், ஆரோக்கியமாக இருக்க தினமும் 20 முதல் 30 நிமிட உடல் பயிற்சிகளில் ஈடுபடுவது அவசியம். முதியவர்களும், உடல் நலக்குறைவு உள்ளவர்களும் உடற் பயிற்சியில் ஈடுபட முடிந்தவரை முயற்சி செய்வது நல்லது.
  • சரியான முகக் கவசத்தை அணிவது முக்கியம். N95 ரக முகக் கவசங்களை மட்டுமே பயன்படுத்துவது நல்லது, சாதரண துணி முகக்கவசம் அணிவதில் எந்த ஒரு பயனும் இல்லை என்பது ஆராய்ச்சி முடிவுகள் கூறுவது குறிப்பிடத்தக்கது.