தினமும் ஷாம்பு போட்டு குளிப்பவரா நீங்கள்? உங்களுக்கான எச்சரிக்கை பதிவு!

தலைமுடியானது அனைவருக்கு அழகின் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. முடியால் தான் பலரும் தன்னம்பிக்கையுடன் இருக்கிறார்கள். ஆனால், தலைமுடியை பராமரிப்பதில் பலரும் தவறு செய்துவிடுகிறார்கள்.

இதனால் முடி உதிர்வை சந்திக்க நேரிடுகிறது. தலைக்கு குளிக்கும் போது ஷாம்பூவை தினமும் நீங்கள் பயன்படுத்துபவர்கள் என்றால் உங்களுக்கான எச்சரிக்கை பதிவு தான் இது.

ஏனென்றால், ஷாம்பூவில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்கள் பல பாதிப்பை உண்டாக்கும். இதனால், உங்கள் தலையில் அதிகமாக வியர்வை சுரக்கிறது. உங்கள் தலை பிசுபிசுப்பை உண்டாக்கும்.

தலையில் இறந்த செல்கள், தூசி, வியர்வை, எண்ணெய், பொடுகு ஆகியவற்றின் காரணமாக அதிகமாக அரிப்பு ஏற்படுகிறது. ஷாம்புவை அன்றாடம் பயன்படுத்தினால், நிச்சயம் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.

அதிலும், முக்கியமாக இந்த பொருட்கள் விலை மிகவும் குறைவாக விற்கப்படும் ஷாம்புவில் அதிக அளவில் இருப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது.

மேலும், ஷாம்புவில் உள்ள சோடியம் லாரில் சல்பேட் கண்களை பாதித்து, நாளடைவில் பார்வையையே பறித்துவிடும். தினமும் ஷாம்பு போட்டு குளித்து வந்தால், சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய்களின் உற்பத்தி குறைந்து, அதனால் சரும பிரச்சனைகள் வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது.