மங்களகரமான பிலவ வருடம் தை 18ஆம் நாள் திங்கள்கிழமை (ஜனவரி மாதம் 31ஆம் திகதி 2022) இன்றைய நாளுக்கான ஒவ்வொரு ராசிகளுக்குமான பலன்களை இந்துக் குருமார் அமைப்பின் தலைவர் கலாநிதி கு.வை.க.ஜெகதீஸ்வரக் குருக்கள் கூறுகின்றார்.
ஜோதிடத்தின் அடிப்படையான நவகிரகங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பெயர்ச்சி ஆகிக் கொண்டு தான் இருக்கின்றன. இப்படிப்பட்ட சூழலில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதைத்தான் கிரகப் பெயர்ச்சி என்கிறோம். அந்த அமைப்பே எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக இந்து மக்களிடையே நம்பிக்கை நிலவி வருகிறது.
இதன்படி, மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்,
மேஷம்: மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. குடும்பத்தில் குதூகலம் காணப்படும். தம்பதியர் ஒற்றுமை மேலோங்கும். தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான விஷயங்களில் அதிக தொகையில் ஈடுபடுத்தும் போது கவனம் தேவை. உத்யோகஸ்தர்களுக்கு கவன சிதறல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு என்பதால் விழிப்புணர்வுடன் செயலாற்றுவது நல்லது.
ரிஷபம்: ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமான பலன்கள் தரக்கூடிய அமைப்பாக இருக்கிறது. தம்பதியர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்படலாம். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் நல்ல பலன் உண்டு. தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இணக்கம் தேவை.
மிதுனம்: மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சிறந்த நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் கவனம் செலுத்துங்கள். உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் மூலம் நுண்ணிய விஷயங்களை கற்றுக் கொள்ளும் பாக்கியம் உண்டாகும். கணவன் மனைவி பிரச்சனையில் மூக்கை நுழைக்காமல் இருப்பது நல்லது.
கடகம்: கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வெளியிட பயணங்களில் கவனம் தேவை. தேவையற்ற பயணங்களை கூடுமான வரை தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புணர்வு அதிகம் தேவை. அலட்சியம் ஆபத்தை ஏற்படுத்தலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குழப்பநிலை நீடிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
சிம்மம்: சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத திடீர் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி இடையே நடக்கும் பிரச்சனைகளை பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு. புதிய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும்.
கன்னி: கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்க்கும் சம்பவங்கள் நடைபெறும். தொழில் மற்றும் வியாபார ரீதியான புதிய பிரச்சனைகளில் இருந்து தள்ளி இருப்பது நல்லது. கணவன் மனைவிக்குள் இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
துலாம்: துலாம் ராசியில் பிறந்தவர்கள் இந்த நாள் நீங்கள் நினைத்ததை சாதித்துக் காட்டும் யோகம் உண்டு. புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் பெரிய தொகையை ஈடுபடுத்தி அதிக லாபம் காண்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு மன நிம்மதி இருக்கும்.
விருச்சிகம்: விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் பொறுமை காப்பது நல்லது. சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் நீடிக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான புதிய முயற்சிகளுக்கு வரவேற்பு கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு விமர்சனங்களை தாண்டிய முன்னேற்றம் இருக்கும்.
தனுசு: தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பணம் பல வழிகளிலும் வந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும் அற்புத நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். மறைமுக எதிரிகளின் தொல்லை வலுவாகும் என்பதால் விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது.
மகரம்: மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதையும் பொறுமையுடன் கையாளுவது நல்லது. முன்பின் தெரியாதவர்களின் அறிமுகம் தவிர்ப்பது உத்தமம். கணவன் மனைவியிடையே இருந்து வந்த பனிப்போர் நீங்கும். சுபகாரியத் தடைகள் விலகும். புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு சாதக பலன் உண்டு. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சுற்றியிருப்பவர்களின் சூழ்நிலை புரிந்து செயல்படுவது நல்லது.
கும்பம்: கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் குதூகலம் காணப்படும். உற்றார் உறவினர்களின் வருகை உற்சாகத்தை ஏற்படுத்தும். நீண்டநாள் இழுபறியில் இருந்து வந்த விஷயம் நடைபெறும். புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவை பெறுவது நல்லது. கணவன் மனைவி இடையே புதிய புரிதல் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரித்து காணப்படும்.
மீனம்: மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாளாக இருக்கும். தேவையற்ற சந்தேகத்தை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் மூத்தவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் மற்றும் வியாபார ரீதியான முதலீடுகளில் ஆலோசனை பெறுவது நல்லது. பெரிய மனிதர்களை சந்திக்க நேரிடும். புதிய நட்பு வட்டம் விரியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும்.