மாத ஆரம்பத்திலேயே பண நெருக்கடியைச் சந்திக்கப்போகும் ராசியினர்! ஆனால் இடப ராசியினருக்கு

மங்களகரமான பிலவ வருடம் தை 19ஆம் நாள் செவ்வாய்க்கிழமை (பெப்ரவரி மாதம்1ஆம் திகதி 2022) இன்றைய நாளுக்கான ஒவ்வொரு ராசிகளுக்குமான பலன்களை இந்துக் குருமார் அமைப்பின் தலைவர் கலாநிதி கு.வை.க.ஜெகதீஸ்வரக் குருக்கள் கூறுகின்றார்.

ஜோதிடத்தின் அடிப்படையான நவகிரகங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பெயர்ச்சி ஆகிக் கொண்டு தான் இருக்கின்றன. இப்படிப்பட்ட சூழலில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதைத்தான் கிரகப் பெயர்ச்சி என்கிறோம்.

அந்த அமைப்பே எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக இந்து மக்களிடையே நம்பிக்கை நிலவி வருகிறது.

இதன்படி, மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்,

மேஷம்: மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் நிதானம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்கள் வேலை உண்டு, நீங்கள் உண்டு என்று இருப்பது நல்லது. தேவையில்லாத விஷயத்தில் மூக்கை நுழைத்தால் மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். சுயதொழில் எதிர்பார்க்கும் லாபம் காண பொறுப்புணர்வு தேவை. திடீர் செய்தி மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.

ரிஷபம்: ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கவலைகள் மறந்து உற்சாகத்துடன் செய்யப்படக்கூடிய நாளாக அமைய இருக்கிறது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு உங்களுடைய நாணயம் சமூகத்தில் மதிப்பை உண்டாக்கி தரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சக போட்டியாளர்களை சமயோசிதமாக வெற்றி காணும் வாய்ப்புகள் அமையும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமையை வளர்ப்பது நல்லது.

மிதுனம்: மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கும். எனவே எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் மனக்கசப்புகள் உண்டாகக்கூடும் என்பதால் கவனம் தேவை. சுய தொழிலில் இருப்பவர்கள் சுற்றியுள்ளவர்களை கவனிக்க வேண்டும். உடனிருப்பவர்களே ஏமாற்றக் கூடிய வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியம் மேம்படும்.

கடகம்: கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வெற்றி காணக் கூடிய யோகம் உண்டு என்பதால் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. குடும்பத்தில் அமைதி நிலவும். உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருகும். கணவன் மனைவிக்கு இடையே நம்பிக்கை அதிகரிக்கும். சுயதொழில் மூலம் வர கூடிய வருமானம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படலாம். வெளியிடங்களில் கவனத்துடன் இருப்பது நல்லது.

சிம்மம்: சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமான அமைப்பு என்பதால் எதையும் துணிச்சலாக முடிவெடுப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மற்றவர்களை நம்பி பொறுப்பை ஒப்படைப்பதில் கவனம் செலுத்துங்கள். சுயதொழில் புரிபவர்கள் தங்களுக்கு கீழ் பணிபுரியும் பணியாளர்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது மூலம் ஏற்றம் காணலாம். அனாவசிய பேச்சுகளை குறைத்துக் கொள்வது நல்லது. ஆரோக்கியம் சீராகும்.

கன்னி: கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதையும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. புதிய முயற்சிகளில் கவனம் செலுத்துங்கள். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு விமர்சனங்களை தாண்டிய வரவேற்பு இருக்கும். கணவன் மனைவி உறவு சிக்கல் மேலும் வலுவாக பார்த்துக் கொள்வது நல்லது. பெரிய மனிதர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.

துலாம்: துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நன்மைகள் நடக்கக் கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. விட்டொழிய நினைத்த விஷயத்தை விட்டொழித்து காட்டுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே சிறு சிறு சண்டை சச்சரவுகள் வந்து மறையும். பூர்வீக சொத்து பிரச்சனைகளுக்கு யோசித்து முடிவெடுப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சுய தொழிலில் இருப்பவர்கள் பொறுமை காப்பது நல்லது.

விருச்சிகம்: விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மேன்மை உண்டாக கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. கணவன் மனைவியிடையே இருக்கும் நெருக்கம் அதிகரிக்க விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உத்தியோகத்திலிருப்பவர்கள் தேவையற்ற கடன்களை தவிர்ப்பது உத்தமம். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். முடிக்கப்படாத ஒன்று முடிவுக்கு வரும். ஆரோக்கியம் மேம்படும்.

தனுசு: தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தடைகளை எதிர்த்து போராட கூடிய வல்லமை பிறக்கும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு நிகழும் என்பதால் முன்கூட்டியே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பொருளாதார ரீதியான முன்னேற்றத்தில் ஏற்ற இறக்கம் இருப்பதால் பண விஷயத்தில் ஆடம்பரத்தை தவிர்த்து செயல்படுவது நல்லது. தகுந்த சமயத்தில் நண்பர்களின் உதவி கரம் கிடைக்கும். ஆரோக்கியத்தை கவனியுங்கள்.

மகரம்: மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் செய்ய நினைத்த ஒரு விஷயத்தை உரிய நேரத்தில் செய்ய முடியாமல் போகலாம். எதிலும் பொறுமையை கடைபிடிப்பது நல்லது. கணவன் மனைவியிடையே இருக்கும் கருத்து மோதல் வலுவாக கூடும். சுய தொழிலில் இருப்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டால் முன்னேற்றம் காணலாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் போட்டியாளர்களுக்கு எதிராக புது வியூகம் அமைப்பீர்கள்.

கும்பம்: கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமற்ற பலன்கள் கிடைக்கும் என்பதால் தன்னம்பிக்கையுடன் இருப்பது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது உத்தமம். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. சிறு தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மந்த நிலை காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் பேச்சில் இனிமையை கடைபிடிப்பது நல்லது. ஆரோக்கியம் சீராகி வரும்.

மீனம்: மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்க்கும் பணவரவு கிடைக்கும் என்பதால் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். சுபகாரியத் தடைகள் விலகி குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். உத்தியோகத்தில் நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு பெற்றோர்களின் ஆதரவு பெறுவீர்கள். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டிவரும். கடிவாளம் போட்டது போல் உங்கள் இலக்கை நோக்கி மட்டுமே. பயணிப்பது உத்தமம்.