ஜோதிட சாஸ்திரத்தின் படி, அனைத்து கிரகங்களும் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குப் பிறகு ராசியை மாற்றி அடுத்த ராசிக்குள் நுழைகின்றன.
நிழல் கிரகமாகக் கருதப்படும் ராகு, 18 மாதங்களுக்குப் பிறகு ஏப்ரல் 12ஆம் தேதி மேஷ ராசியில் பிரவேசிக்கிறார். ராகு இப்போது ரிஷப ராசியில் இருக்கிறார். அனைத்து கிரகங்களிலும், ராகு மட்டுமே நேராக நகராமல் தலைகீழாக நகரும் கிரகமாக உள்ளார்.
ராகுவின் இந்த மாற்றத்தால் 5 ராசிக்காரர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு ராகு மாற்றத்தால் ஏற்படக்கூடும் தாக்கத்தைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
மேஷம்: மேஷ ராசிக்கு ராகு இட மாறவுள்ள நிலையில் மேஷ ராசிக்காரர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இது தவிர, தொழில் மற்றும் வியாபாரத்திலும் பல வகையான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
ராகு ராசி மாறும் காலத்தில் நிதி முதலீடு தவிர்க்கப்பட வேண்டும். மேலும், மேஷ ராசிக்காரர்கள், பேச்சைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லையெனில் சிக்கலில் மாட்டிக்கொள்ள நேரிடலாம்.
சிம்மம் : ராகு சிம்ம ராசிக்காரர்களுக்கும் சிறிது அளவு பாதிப்புகளை ஏற்படுத்துவார். உத்தியோகத்தில் சிரமங்களை சந்திக்க நேரிடலாம். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். பயணங்களால் திடீர் பண இழப்பு ஏற்படக்க்கூடும். வியாபாரத்தில் பண இழப்பும் ஏற்படலாம்.
கன்னி : கன்னி ராசியினரின் ஆரோக்கியத்தில் ராகுவின் ராசி மாற்றம் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். இந்த காலத்தில் கன்னி ராசிக்காரர்கள் வெளி இடங்களில் உணவு உண்பதை தவிர்க்க வேண்டும். இது தவிர பணப் பரிவர்த்தனைகளிலும் கவனம் தேவை. சிலரால் உங்களுக்கு நிதி இழப்பு ஏற்படவும்.
துலாம் : துலா ராசிக்காரர்கள் ராகு இடமாறும் காலகட்டத்தில் புதிய வேலைகளைத் தொடங்குவதைத் தவிர்க்க வேண்டும். கூட்டுத் தொழிலில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இது தவிர காதல் வாழ்க்கையிலும் பிரச்சனைகள் வரக்கூடும்.
விருச்சிகம் : ராகுவின் ராசி மாற்றம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும். இது தவிர, இந்த காலகட்டத்தில் சமூக கௌரவத்திலும் பாதகமான விளைவுகள் ஏற்படும். பொருளாதார விஷயங்களில் எந்த ஒரு பெரிய முடிவையும் எடுப்பதற்கு முன், இந்த ராசிக்காரர்கள் அதைப் பற்றி தீவிரமாக சிந்திப்பது நல்லது.