ஜோதிடத்தில் 9 கிரகங்கள் மற்றும் 12 ராசிகள் உள்ளன. ஜோதிடத்தில், சனி கர்மாவை அளிப்பவர் என்று கூறப்படுகிறது. சனி தேவன் தனது ராசியை மாற்றும்போது, சனியின் தசை அல்லது ஏழரை நாட்டு சனி ஏற்படுகிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் சனியின் சஞ்சாரம் எப்போது மாறும், எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சனி தசை மற்றும் ஏழரை நாட்டு சனியில் இருந்து விடுதலை கிடைக்கும் என்பதை பார்போம்.
சனி பகவான் விரைவில் ராசி மாறப் போகிறார். ஜோதிட சாஸ்திரப்படி ஏப்ரல் 29ம் தேதி சனிபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்குள் நுழைகிறார். சனியின் ராசி மாற்றத்தால் சில ராசிகளில் சனி தசையும், ஏழரை நாட்டு சனியும் தொடங்கும்.
அதே சமயம் சில ராசிக்காரர்கள் அதன் பலனில் இருந்து விடுபடுவார்கள். இந்த சனியின் ராசி மாற்றத்தால் தனுசு ராசியில் இருந்து ஏழரை நாட்டு சனி நீங்கும். இதன் மூலம் மிதுனம் மற்றும் துலாம் ராசிக்காரர்கள் சனி தசையிலிருந்து விடுபடுவார்கள்.
இருப்பினும், ஜூலை 12 ஆம் தேதி, சனியின் வக்ர நகர்வு மீண்டும் மகர ராசியில் ஏற்படுகிறது. இதன் காரணமாக மிதுனம், துலாம் மற்றும் தனுசு ராசிகளில் சனி தசையில் தொடங்கும். இந்த 3 ராசிக்காரர்களும் 2023ல் சனி தசையில் இருந்து விடுதலை பெறுவார்கள்.