புதன் கிரகத்தால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஏற்பட்டவுள்ள பெரிய மாற்றம்!

இன்று (4-02-2022) முதல் புத்திக்கூர்மை, வியாபாரம் ஆகியவற்றின் அதிபதியான புதன் கிரகத்தின் இயக்கம் தொடங்கியுள்ளது. இதன் நேரடி தாக்கம் மக்களின் பேச்சு, தர்க்கம், அறிவுத்திறன் மற்றும் பணத்தின் மீது இருக்கும்.

ஜோதிடத்தின் படி, புதன் கிரகத்தின் மாற்றத்தால் 4 ராசிகளில் மிகப்பெரிய தாக்கம் ஏற்படும். இவ் விளைவுகள் சிலருக்கு சுபமாகவும் சிலருக்கு அசுபமாகவும் இருக்கும். புதனின் நேரடி சஞ்சாரம் மூன்று ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமையும், 1 ராசிக்கு இது அசுப பலன்களைத் தரவுள்ளது.

பெப்ரவரி 4 ஆம் திகதி காலை 09:16 மணி முதல் இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் புதன் என்ன பெரிய மாற்றங்களை கொண்டு வருகிறார் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு நல்ல நேரம்

மேஷம் : இந்த ராசிக்காரர்களுக்கு புதனின் நேரடி சஞ்சாரம் மிகவும் சாதகமாக இருக்கும். இவர்களுடைய தொழிலில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும். வெற்றிக்கான பாதை எந்த தடையும் இன்றி தெளிவாக உள்ளது. புதிய சலுகைகள் கிடைக்கும், படைப்புகள் பாராட்டப்படும், வருமானம் அதிகரிக்கும். மொத்தமாக, இது மிகவும் நல்ல நேரம். ‘ஓம் நமோ நாராயணா’ என்ற மந்திரத்தை தினமும் 41 முறை உச்சரிப்பது வெற்றியை இரட்டிப்பாக்கும்.

ரிஷபம் : இந்த ராசிக்காரர்களுக்கு புதனின் சஞ்சாரம் மிகவும் சாதகமாக இருக்கும். இதுவரையில் தடைப்பட்ட பணிகள் இப்போது நடக்கும். உங்களுக்கு வரவேண்டிய பணம் வரும். இதேவேளை, தொழிலதிபர்கள் அதிக லாபம் அடைவார்கள். வியாபாரம் வளரும். வெளிநாட்டில் இருந்து லாபம் உண்டாகும். ‘ஓம் ப்ராம் பிரிம் ப்ரௌன் சஹ புதாய நமஹ’ என்ற மந்திரத்தை தினமும் 32 முறை உச்சரித்து வந்தால் லாபம் அதிகரிக்கும்.

மகரம் : இந்த ராசியில் புதன் இதுவரை தலைகீழ் இயக்கத்தைக் கொண்டிருந்தார். தற்போது புதனின் இயக்கம் இந்த ராசியில் நேரடியாக இருப்பதால், புதனின் நேரடி சஞ்சாரம் இந்த ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையும். தொழிலில் இருந்து வந்த சிரமங்கள் நீங்கும். வெற்றிகள் வர ஆரம்பிக்கும். பண வரவு சாதகமாக இருக்கும். வெளியூர் பயணம் நல்ல செய்திகளை கொண்டு வரும். நாராயணீயம் பாராயணம் செய்வது நன்மை தரும்.

இந்த ராசிக்காரர்களுக்கு பாதகமான சூழல் ஏற்பட வாய்ப்பு:

தனுசு : இந்த ராசிக்காரர்களுக்கு புதனின் இந்த சஞ்சாரம் சாதகமற்றதாக இருக்கும். அவர்கள் நிதி நெருக்கடிகளை சந்திக்க நேரிடலாம். அதிக செலவுகள் வரும். பணம் எங்காவது சிக்கிக்கொள்ளும். ஆகையால், தனுசு ராசிக்காரர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். இந்த நேரம் தொழில் ரீதியாகவும் சிறப்பாக இருக்காது. உடல் ஆரோக்கியத்தில், குறிப்பாக கண்களில் அதிக கவனம் தேவை. தினமும் காலையில் ‘ஓம் நமோ நாராயணா’ என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிப்பது நன்மை தரும்.