மகர ராசியில் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்ற புதன் பகவான் வக்ர பெயர்ச்சியில் மகர ராசியிலேயே நேர்கதியாக நகர்ந்து கொண்டிருக்கின்றது.
புதனின் நேரடி சஞ்சாரத்தால் மகர ராசியில் ராஜயோகம் போல் சுப புத்தாதித்ய யோகம் உருவாகியுள்ளது.
பல ராசிக்காரர்களுக்கு மார்ச் மாதம் முதல் வாரம் வரை சிறப்பான சுப யோக பலன் கிடைக்கும். யார் யார் அந்த விபரீத நற்பலன்களை பெரும் ராசி என்பதை பார்க்கலாம்.
மேஷ ராசி
உங்களின் மதிப்பு அதிகரிக்கும். தொழில் சார்ந்த விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் மின்னல் வேகத்தில் நல்ல வருமானம் பெறுவீர்கள். திடீர் பண வரவு ஏற்படும்.
மிதுன ராசி
உத்தியோகத்தில் சில நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி நிம்மதி கிடைக்கும். தன வரவு உங்களுக்கு சாதகமானதாக இருக்கும்.
வர வேண்டிய பணம் வந்து சேரும்.உங்கள் செலவுகள் அதிகரித்தாலும், அவற்றை ஓரளவு கட்டுப்படுத்த முடியும்.
கடக ராசி
உங்கள் ராசி ஏழாவது வீடான துணை, பங்காளி ஸ்தானத்தில் புதன் சஞ்சரிப்பது உங்களுக்கு நன்மை பயக்கும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.நிதி விஷயங்களில் ஆதாயம் அடைவீர்கள்.
கன்னி ராசி
அடுத்த ஒரு மாதத்திற்கு இந்த ராசிக்காரர்களுக்கு இன்சூரன்ஸ், வங்கி, வர்த்தகம் தொடர்பான பலன்கள் கிடைக்கும்.
காதல் வாழ்க்கையின் உங்களுக்கு அற்புதமாக இருக்கும். இந்த நாட்களில் உங்களுக்கு பரிசு அல்லது திடீர் லாபத்திற்கான வாய்ப்பு கிடைக்கும்.
மகர ராசி
மகர ராசியில் புதன் சஞ்சரிப்பதால், உங்களுக்கு புத்தாதித்ய யோகம் சிறப்பு பலனைத் தரும். இந்த நாட்களில் உங்கள் முடிக்கப்படாத மற்றும் தடைப்பட்ட பல வேலைகளைச் செய்து முடிப்பீர்கள்.
காதல் வாழ்க்கையில் நெருக்கம் அதிகரிக்கும். உங்கள் முதலீடு மற்றும் பங்கு மூலமும் பொருளாதாரம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு இந்த மாதம் சிறப்பானதாக இருக்கும்.