சனி, செவ்வாயுடன் கூட்டு சேரும் சுக்ர பகவான்… இந்த 5 ராசிக்கும் தலையெழுத்தே இந்த மாதத்தில் மாறப்போகிறது?

சுக்ர பகவானின் பெயர்ச்சி பிப்ரவரி 27ம் தேதி நடக்க உள்ளது.

சுக்கிரனின் வீடாக இருக்கும், சனி ஆட்சி அதிபதியாக இருக்கும் மகரத்தில் பெயர்ச்சி ஆக உள்ளார்.

மகரத்தில் சுக்கிரனின் கோள் சார பலன் எப்படி இருக்கும் என்பதைப் பார்ப்போம்.

மேஷம்
மேஷ ராசியினருக்கு அதிர்ஷ்டம் உங்களை பெரிதும் ஆதரிக்கும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். சுப நிகழ்வுகள் செய்ய உங்களுக்கு சாதகமானதாக அமையும்.

ரிஷபம்
ரிஷபம் ராசிக்கு பொருளாதார முன்னேற்றம் ஏற்படவும், பணம் வரவு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. வியாபாரத்தில் சாதக நிலைமை ஏற்படும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. உறவுகளின் அன்பும், ஆதரவு கிடைக்கும். காதல் உறவு வலுவாக இருக்கும்.

கடகம்
கடகம் சுக்கிரனின் 7ம் பார்வையாக மனைவி, தொழில், கூட்டாளி ஸ்தானமான கடக ராசி மீது விழுவதால் உங்களின் தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பொருளாதார நிலை மேம்படும். பல வகையில் உங்களுக்கு அதிர்ஷ்டம் ஏற்படும்.

சிம்மம்
சிம்மம் சுக்கிரனின் அமைப்பு சிம்ம ராசிக்கு சாதகமானதாக அமையும். நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. குடும்ப உறுப்பினர்களின் சிறந்த ஒருங்கிணைப்பால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு நல்ல வெற்றி கிடைக்க வாய்ப்புகள் அமையும். உங்களின் பேச்சு, செயலில் நல்ல முன்னேற்றத்தை அடைய முடியும். மாணவர்களுக்கு இந்த காலம் உங்களுக்கு வரப்பிரசாதமாக அமையும்.