செவ்வாய் பகவான் பிப்ரவரி 26ம் தேதி, மகர ராசியில் உச்சம் அடைகிறார்.
மகர ராசியில் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதோடு, அவர்களோடு செவ்வாய் சேருவதால் சில விபத்துகள் ஏற்பட்டாலும் பெரும்பாலும் நற்பலன்களைத் தருவதாக இருக்கும்.
செவ்வாய் பெயர்ச்சியால் அற்புதப் பலன்களைப் பெற உள்ள ராசிகளை இங்கு பார்ப்போம்.
மேஷம்
உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசிக்கு பத்தாவது வீடான கர்மா வீட்டில் இருப்பதால் உங்களின் முயற்சிகள் வெற்றி தருவதாகவும், உங்களின் முயற்சிகளுக்கு பலரின் ஆதரவும், உதவிகளும் கிடைக்கும். இந்த காலத்தில் பதவி உயர்வு பெறவும் வாய்ப்புள்ளது.
சிம்மம்
சிம்ம ராசிக்கு நட்பு கிரகமான செவ்வாய் பகவான் ராசிக்கு 6ம் வீட்டில் இருப்பதால் உங்களின் எதிரிகளின் தொல்லை திரும். இந்த காலகட்டத்தில் வியாபாரிகளுக்கு பல வழிகளில் லாபம் கிடைக்கும். தாயின் அன்பும், அரவணைப்பும் அதிகரிக்கும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் அதிகரிக்கும்.
விருச்சிகம்
உங்கள் தன்னம்பிக்கை அதிகரிப்பதைக் காணலாம். உங்கள் வாழ்க்கையைச் சரியான திசையில் கொண்டு செல்ல முடிவெடுக்கும் உங்கள் திறன் அபாரமாக இருக்கும். வேலை சம்பந்தமாக பயணம் செய்யும் வாய்ப்பைப் பெறலாம் மற்றும் பயணங்களால் நீங்கள் நன்மைகளைப் பெறுவதற்கான எல்லா வாய்ப்புகளும் உள்ளன.
கன்னி
உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் மாணவர்களுக்கு கல்வியில் நல்ல மேன்மை அடையலாம். காதல் வாழ்க்கையில் இனிமையான தருணங்கள் அமையும். தங்கள் துணையுடன் அற்புதமான நேரத்தை செலவிடுவீர்கள்.