பிப்ரவரி 24 இந்த 5 ராசி மீதும் விழும் சனியின் பார்வை… ஒரே நாளில் லட்சாதிபதியாக போவது யார் ?

சனி பகவான் ஜனவரி மாதத்தில் அஸ்தமனமானார். மீண்டும் பிப்ரவரி 24 அன்று உதயமாகி, இயல்பு நிலையில் பயணிக்கவுள்ளார்.

சனி பகவானின் உதயத்தால் சில ராசிக்காரர்களுக்கு வெற்றியும், தொழிலில் புதிய வாய்ப்புக்களும் கிடைக்கும்.

ஜோதிடத்தின் படி, சனி பகவானின் உதயத்தால் 5 ராசிக்காரர்கள் பிப்ரவரி 24 ஆம் தேதியில் இருந்து நற்பலன்களைப் பெறப் போகிறார்கள்.

அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
வியாபாரிகள் நல்ல லாபத்தைக் காண்பார்கள். உங்களுக்கு பணியிடத்தில் ஒரு பெரிய பதவியைப் பெற வாய்ப்புள்ளது. பல புதிய வேலை வாய்ப்புக்களை உங்களைத் தேடி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வருமான உயர்விற்கான வாய்ப்புக்கள் உள்ளன.

ரிஷபம்
சனி உதயமாகும் போது ரிஷப ராசியில் ராஜ யோகம் உருவாகிறது. அரசியலில் தொடர்புடையவர்களுக்கு இக்காலத்தில் பெரிய பதவி கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன.

கடகம்
இரும்பு, எண்ணெய் மற்றும் சுரங்கம் போன்ற சனி தொடர்பான வியாபாரம் செய்பவர்கள் இக்காலத்தில் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். இதன் மூலம் ஒரு நாளில் அதிக பணம் சம்பாதிக்கும் அதிர்ஷ்டம் கூட கிடைக்கும்.

துலாம்
துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன். சனிக்கும் சுக்கிரனுக்கும் இடையே நட்புறவு உள்ளது. எனவே இக்காலத்தில் நிதி நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்படும்.

மகரம்
மகர ராசிக்காரர்கள் இக்காலத்தில் நல்ல ராஜ வாழ்க்கையை வாழ்வார்கள். அரசியலில் தொடர்புடையவர்களுக்கு பெரிய பதவி கிடைக்கும். பங்கு சந்தையில் முதலீடு செய்து நற்பலன்களைப் பெறுவீர்கள். மேலும் உங்கள் கௌரவம் இக்காலத்தில் உயரும். திடீர் அதிர்ஷ்யத்தால் ஒரே நாளில் பணக்காரராக வாய்ப்புகள் உள்ளது.