ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரகங்களின் அடிப்படையால், ஒவ்வொரு ராசிக்கும் பல மாற்றங்கள் உண்டாகிறது. புதன் பெயர்ச்சியானது, மார்ச் 15-ம் தேதி முதல் சூரியன் ராசிக்கு மாறுகிறார். மார்ச் 31ஆம் தேதி சுக்கிரன் கும்ப ராசிக்குள் நுழைகிறார். சனி பகவான் ஏற்கனவே மகர ராசியில் இருக்கிறார்.
இதனிடையே, சதுர்கிரக யோகம் 4 ராசிக்காரர்களுக்கு அளப்பரிய பலன்களைத் தரும். சதுர்கிரக யோகத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நற்பலன்கள் என்பதை பற்றி பார்ப்போம்.
மேஷம்
மேஷ ராசியினர்களுக்கு சதுர்கிரக யோகத்தால் மகத்தான பலன்களை அடையப்போகிறார்கள். வேலையில் மேஷ ராசிக்கு செயல்திறன் நன்றாக இருக்கும்.
உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டாகும். இதைதவிர வியாபாரத்தில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்.
ரிஷபம்
ரிஷப ராசியினர்களுக்கு பொருளாதாரம் வலுவாக இருக்கும். உத்தியோகத்தில் லாபத்தை அடைவீர்கள். வருமானம் இரட்டிப்பாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
துலாம்
துலா ராசியினர்களுக்கு பதவி உயர்வால் வருமானம் அதிகரிக்கும். தொழில் திட்டங்கள் வெற்றி பெறும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் மனைவி இடையே முழு ஆதரவு கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியினர்களுக்கு சதுர்கிரக யோகம் நற்பலன்களை அள்ளித்தரும். உத்தியோகத்தில் சாதகமான பலன்களை அடைவீர்கள். வருமானம் அதிகரிக்கும். மற்ற வகைகளில் இருந்து வருமான உங்கள் கைக்கு தேடி வரும்.