மகா சிவராத்திரி என்பது சிவனை நினைத்து அன்றைய தினம் முழுவதும் விரதம் இருந்து 4 ஜாமங்களிலும் சிவனுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டு, இறைவனின் அருளைப் பெறக்கூடிய அற்புதமான திருநாள்.
இந்த நாளில் நாம் என்னென்ன செயக்கூடாத சில விடங்களை இங்கு தெரிந்துகொள்ளலாம்.
- மஹா சிவராத்திரி அன்று செய்ய கூடாத மிக முக்கியமான தவறு பக்தர்களுக்கு உணவு அளிப்பது.
- மனிதர்களுக்கு ரொம்ப முக்கியானது இரண்டு விஷயம். உணவு, நல்ல தூக்கம், இந்த இரண்டையும் விலக்கி, சிவனுக்காக நாம் விரதமிருப்பது தான் இந்த நாளின் நோக்கமாகும்.
- உணவையும் உறக்கத்தையும் விலக்கினால் புலன்கள் தானாகவே அடங்கும். அப்போது இறையுணர்வு பெற முடியும். நினைத்த காரியம் சித்தி ஆகும்.
- ஆனாலும் அனைவராலும் விரதம் இருக்க முடியாது என்பது நிதர்சனம். குழந்தைகளும், பெரியவர்களும் அவர்கள் உடல் நிலையைப் பொருத்து உணவு எடுத்துக் கொள்வது அவசியம் தான்.
- சிவ பெருமான் ஆரவாரத்தை விரும்பாமல் அமைதியையே விரும்புபவர்.
- சிவ வழிபாட்டில் குங்குமம் அதிகம் பயன்படுத்தப்படுத்தக் கூடாது
- சிவனுக்கு துளசி இலைகளை அர்ப்பணிக்கக்கூடாது. அப்படி அர்பணிக்காமல் இருப்பதற்கு ஒரு காரணம் சொல்லப்படுவதுண்டு. துளசியின் மணாளனான ஜலந்தர் எனும் அரக்கனை சிவபெருமான் வதைத்த காரணத்தால். சிவபெருமானை தன்னுடைய இலைகள் கொண்டு வழிபடக்கூடாது துளசி சபித்தாக புராணங்கள் கூறுகின்றன.
- சங்கரரை வழிபடும்போது சங்கு ஊதக்கூடாது. தண்ணீரைப் பிரதிஷ்டை செய்யக்கூடாது.
- உடைந்த அரிசியை சிவபெருமானுக்கு ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது. அதுபோல அரிசி நன்கு தூய்மையாகவும் இருக்க வேண்டும்.
- சிவப்பு மலர்கள் கடவுளால் சபிக்கப்பட்டவை என்பது நம்பிக்கை. அதனால்தான் சிவபெருமானுக்கு சிவப்பு மலர்களை அர்ப்பணிக்கக்கூடாது.