ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு முக்கியத்துவம் உண்டு.
இந்த கிரகங்களில் சனி, ராகு மற்றும் கேது ஆகிய கிரகங்களின் மீது பொதுவாக மக்களுக்கு அதிக அச்சம் இருக்கின்றது.
இந்த கிரகங்களில் கோவத்திலிருந்து தப்பிக்கவே அனைவரும் விரும்புகிறார்கள்.
இன்று ரிஷப ராசியில் ராகு மற்றும் சந்திரன் சேர்க்கை உருவாகிறது.
இது 12 ராசிகளையும் பாதிக்கும். இப்போது ரிஷப ராசியில் ராகு சந்திர சேர்க்கையால் 12 ராசிகளும் பெறும் பலன்கள் என்னவென்பதைக் காண்போம்.
மேஷம்
ராகு சந்திர சேர்க்கை இந்த ராசிக்காரர்களுக்கு மோசமாக இருக்கும். தைரியமின்றி இருக்கலாம். உங்கள் உடன்பிறப்புகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.
ரிஷபம்
இக்காலத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.
மிதுனம்
காதலிப்பவர்கள் தங்கள் துணையைப் பிரியும் சூழ்நிலை ஏற்படலாம். மனதில் எதிர்மறை எண்ணங்கள் அதிகம் இருக்கும்.
கடகம்
நாள்பட்ட நோய் ஏதேனும் இருந்தால், அதை உடனே கவனியுங்கள். உடல் ஆரோக்கியத்தில் அலட்சியமாக இருக்காதீர்கள்.
சிம்மம்
வாழ்க்கைத் துணையின் வார்த்தைகளை அலட்சியம் செய்யாதீர்கள். வியாபாரத்தில் பிரச்சனைகள் வரலாம்.
கன்னி
இக்காலத்தில் உங்கள் எதிரிகள் சுறுசுப்பாக இருப்பார்கள் என்பதால் கவனமாக இருங்கள்.
துலாம்
உங்கள் மனம் சொல்வதைப் போல் நடந்து கொள்வீர்கள். மற்றவர்கள் உங்களின் திட்டங்களைப் புரிந்து கொள்வது கடினமாக இருக்கும்.
விருச்சிகம்
எக்காரணம் கொண்டும் உங்கள் இலக்கை கைவிடாதீர்கள். பொறுமையாக நடந்து கொள்ளுங்கள்.
தனுசு
கடின உழைப்பிற்கு ஏற்ற முழு பலனையும் பெறுவீர்கள். யாரையும் கண்மூடித்தனமாக நம்பி சிக்கலில் சிக்கிவிடாதீர்கள். கவனமாக இருங்கள்.
மகரம்
சனி, சுக்கிரன், செவ்வாய் ஆகிய மூன்று கிரகங்களும் இணைந்துள்ளன. இதனால் முக்கியமான பணிகளை முடிப்பது கடினமாக இருக்கும். அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள்.
கும்பம்
கும்ப ராசியில் குரு, சூரியன், புதன் ஆகிய கிரகங்கள் இணைந்துள்ளன. இதனால் இக்காலத்தில் உங்கள் மரியாதை குறையலாம். உங்களின் திட்டங்கள் தோல்வியடையலாம்.
மீனம்
ராகு சந்திரன் சேர்க்கையால் மற்றவர்களுடன் இனிமையாக பேச முயற்சி செய்யுங்கள். பண இழப்பும் ஏற்படலாம் என்பதால் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருங்கள்.