சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய கிரகம் குரு (வியாழன் ). இந்த குரு 2022 ஏப்ரல் 13 ஆம் தேதி அதன் சொந்த ராசியான மீன ராசிக்கு செல்லவிருக்கிறது.
சொந்த ராசிக்கு குரு செல்வதால், இந்த குரு பெயர்ச்சியின் முக்கியத்துவம் மேலும் அதிகரித்துள்ளது. குரு மீன ராசிக்கு செல்வதால் சில ராசிக்காரர்கள் நல்ல பண வரவைப் பெறலாம்.
இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
புதிதாக தொழில் தொடங்க அல்லது புதிய வேலையில் சேரத் திட்டமிடுபவர்களுக்கு இது ஒரு நல்ல காலம். இப்பெயர்ச்சியால் நல்ல பண வரவு உண்டு.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தரும். இப்பெயர்ச்சியால் நல்ல அதிர்ஷ்டமும் கௌரவமும் கிடைக்கும்.
மிதுனம்
உங்கள் திட்டங்களுக்கு நிதி உதவியும் கிடைக்க வாய்ப்புள்ளது. வணிகர்களுக்கு இந்த நேரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். அதே வேளையில் இப்பெயர்ச்சிக்கு பின் அதிக பணத்தை சம்பாதிப்பார்கள்.
மீனம்
பணியிடத்தில் மேலதிகாரியின் பாராட்டைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது மற்றும் பதவி உயர்வைப் பெறுவார்கள். வருமானம் உயரும். தொழிலில் சாதகமான வளர்ச்சிக்கான வாய்ப்புள்ளது.