ராகு கேது பெயர்ச்சி திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ஏப்ரல் 12ஆம் தேதி நிகழப்போகிறது.
இந்த கிரகப்பெயர்ச்சியால் சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம் தேடி வரும். சிலர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
யார் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பது குறித்து இன்று தெரிந்து கொள்ளுங்கள்.
துலாம்
கண் நோய்களை கவனமாக கையாளுங்கள். குருவின் சஞ்சாரம் மற்றும் பார்வையால் வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
சனி உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் வீடு மாறும் சூழ்நிலை உண்டாகும், மனதில் சஞ்சலம் உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் யாரிடமும் விதண்டா வாதம் செய்யாதீர்கள்.
விருச்சிகம்
கேது உங்கள் ராசிக்கு ஜென்ம ராசியில் இருக்கிறார் உடலில் அசதியும் சோம்பலும் அதிகரிக்கும். எச்சரிக்கை அவசியயம். சுக்கிரன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் மனைவிக்கு வேண்டியதை வாங்கி கொடுப்பீர்கள் 17ஆம் தேதிக்குப் பின்னர் வண்டி வாகன யோகம் உண்டாகும்.
சனி உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வாகனங்களை பராமரிப்பு செய்வது அவசியம். ராகு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் அக்கம்பக்கத்தினரால் நன்மை உண்டாகும்.
தனுசு
செவ்வாய் உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் தேவையற்ற வீண் பேச்சினை தவிர்க்கவும், வாயை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது.
சனி இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் குழப்பம் உண்டாகும், கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்படும். ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் மனதில் தைரியம் அதிகரிக்கும். கேது உங்கள் ஜென்ம ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வங்கி முதலீடுகள் அதிகரிக்கும்.
மகரம்
ஜென்ம ராசியில் உள்ள செவ்வாயினால் முன்கோபம் அதிகரிக்கும். பேச்சில் கவனம் தேவை. உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் உடல் உழைப்பு அதிகரிக்கும், உடலில் அசதி உண்டாகும்.
ராகு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பொழுதுபோக்கு விஷயங்களில் கவனம் செலுத்துவீர்கள். கேது உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
மீனம்
சூரியன் உங்களுடைய ஜென்ம ராசியில் இருக்கிறார் உடல் உஷ்ணம் அதிகரிக்கும். ராசிநாதன் குரு பகவான் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் இருக்கிறார். சுப விரைய செலவுகள் அதிகரிக்கும்.
எதிலும் அகலக்கால் வைக்க வேண்டாம். தொழில் வியாபாரத்தில் முதலீடு செய்யும் முன்பாக முன்யோசனை அவசியம்.
ராகு மூன்றாமிடத்தில் இருக்கிறார் மனதில் குழப்பம் உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அலைச்சல் அதிகரிக்கும்.