சனி செவ்வாய் சேர்க்கையால் இந்த 3 ராசிக்கும் ஏற்படப்போகும் சிக்கல்

ஜோதிட சாஸ்திரத்தின்படி எந்த ஒரு ராசியிலும் கிரகங்கள் இணைந்தாலும், அவை 12 ராசியையும் பாதிக்கும். சனியும் செவ்வாயும் பகையாளி என்பதால் இரண்டு கிரகங்களும் இணைந்து எந்த ராசியில் இணைந்தாலும் பிரச்சினை தான்.

கடகம்
கடக ராசியினர்களுக்கு சனி மற்றும் செவ்வாய் இணைந்திருப்பது வாழ்க்கையில் சிக்கலை ஏற்படுத்தும். ஏப்ரல் 7ம் தேதி வரை திருமண வாழ்க்கையில் பிரச்சினைகள் வரலாம்.

மேலும், தொழில் பங்குதாரருடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். கூட்டுத்தொழில் வேலையை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும்.

தனிப்பட்ட வாழ்க்கையிலும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் சனி, செவ்வாய் இணைவு சாதகமாக இருக்காது. இதனால் பொருளாதார இழப்புகளை சந்திப்பீர்கள்.

பேச்சில் கவனம் இருக்க வேண்டும். புதிய வேலை தொடங்குவதை தவிர்க்கவும். இல்லையெனில் இழைப்புகள் ஏற்படும்.

முக்கியமான ஆவணங்களில் கையெழுத்திடுவதை தவிர்க்கவும். உறவுகள் மோசமடையலாம்.

கன்னி
கன்னி ராசியினர்களுக்கு இந்த நேரத்தில் குழந்தைகள் தொடர்பான பிரச்சினைகள் சந்திக்க நேரிடும். உயர்கல்வியில் தடைகள் வரலாம். இது தவிர, காதல் வாழ்க்கையில் பரஸ்பர விலகல் இருக்கும்.